அபசகுனமா..? "இடி தாக்கியது".."மழை நீர் புகுந்தது"...தற்போது "தீ"..! மீனாட்சி அம்மன் கோவிலில் ஏன் இப்படி..?

 
Published : Feb 03, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
அபசகுனமா..? "இடி தாக்கியது".."மழை நீர் புகுந்தது"...தற்போது "தீ"..! மீனாட்சி அம்மன் கோவிலில் ஏன் இப்படி..?

சுருக்கம்

fire in meenakshi amman temple and sentimental issue

மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

கோவிலில் தீ பிடிப்பது சென்டிமென்ட் பீல் கொடுவந்துவிடும்.அது  மட்டுமில்லாமல்  காவல் தெய்வமான அம்மன் கோவிலில் தீ பிடித்த சம்பவம் பற்றி பலரும் சில பல  சம்பிரதாய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் நேற்று  இரவு ஏற்பட்ட தீ மெல்ல மெல்ல  பரவ சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இரு பக்கங்களிலும் பரவியது.

அப்போது  அங்கு விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த அலங்கார  பொம்மைகள் முதல்  பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

புறாக்களும் கருகியது

இந்த தீயினால்,கோவிலில் கூடு கட்டி வாழ்ந்து வந்த புறாக்கள் அனைத்தும் தீயில் கருகி பரிதாபமாக உயிர் விட்டது.

மேலும் பல சிற்பங்கள் சேதமடைந்தன.கிழக்கு கோபுர வாசலின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

ஏன் இப்படி நடிக்கிறது...?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக,இதே கிழக்கு பகுதி கோபுரத்தை தான்  இடி தாக்கியது,அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு பெய்த மழை கோவிலுக்குள் புகுந்தது..தற்போது தீ பிடித்து உள்ளது...இப்படி ஒவ்வொன்றாய அதே  இடத்தில் நடந்து வருவதால்,ஏதோ அபசகுனமா என பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி மதுரையில் பெய்த மழை கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. இப்படி அடுத்துடுத்து கிழக்கு கோபுரம் பாதிக்கப்படுவதால் சகுனத்தடையாக இருக்குமா என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க