உங்களால் கருப்பு நிறத்தை பார்க்க முடியவில்லையா? அப்போ இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!

By Asianet Tamil  |  First Published Feb 22, 2023, 10:10 PM IST

பலருக்கும் பல்வேறு வகையான ஃபோபியாக்கள் இருக்கும். இதில் கருப்பு நிறம் அல்லது ஏதேனும் அடர் நிறங்களை பார்த்தால் ’பக்’ என்று அச்ச உணர்வு தொற்றிக்கொள்ளும். இதற்கு மெலனோஃபோபியா என்று பெயர்.
 


கருப்பு நிறத்தின் மீதான அச்ச உணர்வை மருத்துவ ஆதாரங்கள்  மெலனோஃபோபியா என்று கூறுகிறது. இதுவும் ஒரு வகை ஃபோபியா தான். பொதுவாக, சிலருக்கு சில விஷயங்கள் அல்லது சில நிறங்கள் மீது வெறுப்பு அல்லது லேசான பயம் இருக்கலாம். ஆனால் பயம் கடுமையாக இருக்கும்போது அது ஒரு ஃபோபியாவாக மாறுகிறது. அதிலும் ஒருசிலருக்கு ஒரு ஃபோபியா இருந்து, அதுதொடர்புடைய அச்ச உணர்வுகளும் நிறைய இருக்கும். மெலனோபோபியா உள்ள சிலருக்கு மற்ற பயங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதாவது கருப்பு நிறம் மட்டுமில்லாமல் வேறு அடர் நிறங்களை பார்த்தாலும் அவர்களுக்குள் அச்ச உணர்வு ஏற்படும். 

மெலனோஃபோபியா

Tap to resize

Latest Videos

இந்த பாதிப்பு கொண்டவர்கள் தனிமையில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதனாலும் அவர்களுக்கு பயம் ஏற்படும். இது ஆட்டோஃபோபியா என்று கூறப்படுகிறது. அதேபோன்று இருளைக் கண்டாலும அவர்களுக்குள் பயம் ஏற்படும். இது சம்ஹைனோஃபோபியா என்று குறிப்பிடப்படுகிறது. 

ஃபோபியாவுக்கான காரணம்

இந்த ஃபோபியாவின் பின்னணியில் சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. இதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். குடும்பத்தில் மனச்சோர்வு அல்லது மனநிலைக் கோளாறுகள் இருந்தால், அது கவலை மற்றும் இதுபோன்ற அச்சங்களுக்கு வழிவகுக்கும். இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணம் உணர்ச்சிப் பிரச்சனைகளாகவும் இருக்கலாம் என மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.

மெலினோ ஃபோபியாவின் அறிகுறிகள்

இந்த ஃபோபியாக்களுக்கு சில அறிகுறிகள் உள்ளன. கருப்பு நிறங்களைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும். இரவில் வெளியில் செல்லும்போது பதற்றமாக இருப்பது, தன்னடக்கத்தை இழப்பது, கறுப்பு அல்லது அடர் நிறங்களைக் கண்டு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது, கண்களை மூடுவது போன்றவை இந்த ஃபோபியாவின் முக்கிய அறிகுறிகளாகும்.

முட்டை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்குமா?

சிகிச்சை முறைகள்

மெலினோஃபோபியா பிரச்னைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் பின்பற்றப்படுகின்றன. CBT அல்லது conjunctive நடத்தை சிகிச்சை, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவை முதற்கட்ட சிகிச்சைகளாகும். இந்த ஃபோபியாவைத் தவிர்க்க நாமும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காபி, ஆல்கஹால், போதைப் பொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். உங்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். 

click me!