Father's day 2023: தந்தையர் தினத்தில் அப்பாவிற்கு கொடுக்கக் கூடிய அட்டகாசமான பரிசுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
தந்தையர் தினத்திற்கு (ஜூன்.18) இன்னும் சில நாட்களே உள்ளன. அப்பாவுக்கு பரிசளிக்க தனி நாள், கிழமை பார்க்க வேண்டாம் தான். ஆனாலும் தந்தையர் தினத்தில் சில பரிசுகளை கொடுக்கும்போது அவருக்கு தனி மகிழ்ச்சி உண்டாகும். என்ன பரிசுகளை கொடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவது அந்த நாளை இன்னும் அழகாக்க உதவியாக இருக்கும். தந்தையர் தினத்தில் வழங்கக் கூடிய சில பரிசுகளை இங்கு காணலாம்.
எலக்ட்ரிக் சைக்கிள்:
உங்களுடைய தந்தைக்கு சைக்கிள் மீது ஆர்வம் இருந்தால் அதையே பரிசளியுங்கள். எலக்ட்ரிக் சைக்கிள்- (விர்டஸ் மோட்டார்ஸ் ஆல்பா எம் ) உங்களுடைய தந்தையின் தினசரி பயணத்தை எளிதாக்குவதற்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் உகந்தது. அவருக்கு சைக்கிள் ஓட்ட பிடிக்கும் என்றால் இந்த பரிசு அவரை வாயடைக்க செய்யும். தி ஆல்பா எம் Virtus Motors சைக்கிள் 31 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த சைக்கிளில் உள்ள பேட்டரி மூலம், சார்ஜ் செய்வது எளிது. இது அமேசான் இணையதளத்தில் கூட கிடைக்கும்.
வாட்ச்:
இப்போது நிறைய ஸ்மார்ட் வாட்ச் வந்துவிட்டன. உங்கள் தந்தைக்கு ரொம்ப நெருக்கமான பரிசாக வாட்ச் இருக்கும். காலம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அந்த வகையில் காலத்தை காட்டும் வாட்ச் சூப்பரான தந்தையர் தின பரிசாக இருக்கும். வாட்ச் உங்கள் தந்தை ஒவ்வொரு நாளும் அணியக்கூடிய மிகவும் பயனுள்ள பரிசு. வாட்ச் என்பது யார் பரிசளிக்கிறார்களோ அவர்களை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் பரிசு.
செடிகள்:
பல தந்தைகள் தாவரங்களை மிகவும் நேசிக்கிறார்கள். செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். சில தாவரங்கள் நம் வாழ்க்கைக்கு நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக அறியப்படுகிறது. பரிசளிக்கும் தாவரங்கள் பெறுபவருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வாங்கிக் கொடுங்கள். இதனை வீட்டு தோட்டம் அல்லது அலுவலக மேசைகளில் வைத்து அவற்றின் நன்மைகளை அனுபவியுங்கள்.
இ-ரீடர் - கிண்டில் ஒயாசிஸ்
உங்கள் தந்தைக்கு வாசிப்பதில் விருப்பம் இருக்கிறதா? என்ன பார்க்கிறீர்கள்.. உங்களுடைய தந்தைக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்க..ஒரு இ-ரீடரருக்கு (Kindle Oasis (10th Gen) சிறந்த பரிசு தேர்வாக இது இருக்கும். இந்த பொருள் அமேசானில் ₹23,999 விலையில் கிடைக்கும். இந்தச் சாதனம் புத்தகங்களின் பரந்த நூலகத்தை எளிதாக அணுக உதவும்.
இந்தத் தந்தையர் தினத்தில் மேலே குறிப்பிட்ட பரிசுகளை வாங்கி கொடுத்து உங்களுடைய அப்பாவை அசத்துங்கள். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
இதையும் படிங்க: Father's Day 2023: தன்னலமற்ற அன்பின் அடையாளம்! தந்தையர் தினம் ஏன் கண்டிப்பா கொண்டாட வேண்டும் தெரியுமா?