அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாத்துக்கும் ஒரு தினம் இருக்கையில், தாய்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் தந்தைக்கு ஒரு தினம் வேண்டாமா? ஆம், தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இந்த தந்தையர் தினம் அங்கீகாரம் பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றை இந்த பதிவில் காண்போம்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.... உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் ஜூன் 19- ம் தேதி 1910 ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையில் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் தந்தையர் தினத்தை தோற்றுவித்தார்.
தந்தையர் தினம்
சொனாரா ஸ்மார்ட் டாட், அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு நாள் அன்னையர் தினத்தை கொண்டாடிய பின், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்தார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் உயிரிழந்துவிட்டார். அதன் பின் ஆறு குழந்தைகளையும் தந்தை பாசத்துடன் வளர்த்தெடுத்தார். இதனால், இவர் தனது தந்தையை கொண்டாட முடிவு செய்தார்.
தந்தையர் தின முதல் நிகழ்ச்சி
முன்னதாக, 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி 362 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
சொனாரா ஸ்மார்ட் டாட் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி
இந்த சம்வபத்திற்குப் பிறகு, சொனாரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தை தேசிய நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். உள்ளூர் சமுதாயம் மற்றும் அரசாங்கத்திடம் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என கோரி பலமுறை மனு கொடுத்து வந்தார். இவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வாஷிங்டன் 1910, ஜூன் 19-ம் தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வ தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது.
உலக நாடுகளில் தந்தையர் தினம்: