
கள்ள நோட்டு அதிகம் கலந்திருப்பதாலும், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காகவும் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் .
அதன்பின் வெளியான , புதிய ரூபாய் நோட்டிற்கு இன்னும் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், அதற்குள் கள்ள நோட்டு வந்துவிட்டது . வேறு எங்கும் இல்லை ஏடிஎம்மில் இருந்து எடுக்கும்பணத்திலேயே சில கள்ள நோட்டு வெளிவந்துள்ளது.
சென்ற வாரத்தில் டெல்லியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டபணத்தில் ‘பேங்க் ஆஃப் சில்ரன்’ என டைப் செய்த ரூபாய் தாள் வெளியானது . இது மக்களிடையே பெரிய சர்ச்சை கிளப்பியது.
இது போன்று ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது , அது கள்ள நோட்டு என கண்டறியப்பட்டால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள, வங்கி கிளையில் தெரிவித்து, வங்கி அதிகாரி அந்த ரூபாய் தாளின் மீது முத்திரையிடுவார். அதன்பின் அதற்குண்டான நல்ல பணத்தை அந்த நபரிடம் கொடுப்பார் . பின்னர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரு வேளை,இரவு நேரத்தில் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது, இவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் ?
இரவு நேரத்தில் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது, கள்ள நோட்டு என சந்தேகம் இருப்பின், அப்பொழுதே ஏடிஎம் அறையில் வைக்கபட்டுள்ள சிசிடிவி கேமரா முன் நின்று , அந்த ரூபாய் நோட்டை காண்பித்து ,கள்ள நோட்டாக தெரிகிறது என்பதை பதிவு செய்யவேண்டும் ,கூடுதலாக ஏடிஎம் காவலாளியிடம் கூட நீங்கள் தெரிவிக்கலாம். விசாரணையின் போது உதவும்.
எனவே பணத்தை கையாளும் போது, கவனமாக இருப்பது நல்லது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.