
உலக அளவில் பிரபல கார் நிறுவனமான, ரோல்ஸ் ராய்ஸ் 1000 வைரக்கற்களை அரைத்து தூளாக்கி, அதனை பெய்ண்டுடன் கலந்து, காருக்கு வண்ணம் தீட்டி பளபளப்பாக இருக்கும் படி செய்துள்ளனர் . இந்த கார் தங்களின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவருக்காக தயார் செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
ஆனால் யார் அந்த வாடிக்கையாளர் என்ற விவரத்தை இதுவரை நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலிகன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை , “ ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த கார் சாதரணமாக பார்பதற்கு சற்று மங்கிய நிறத்தில் காணப்பட்டாலும் , ஒளி படும் போது ஜொலிக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.