தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட அவசர சட்டம்... இனி இதற்கெல்லாம் அபராதம்... உஷார் மக்களே..!

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2020, 11:55 AM IST
Highlights

கொரோனா தொற்று கால விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
 

கொரோனா தொற்று கால விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசு கடந்த செப்டம்பர் 1 முதல் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட தளர்வுகளில் மக்கள் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில், தனிமனித இடைவெளி, முகக்கவசம், பொது இடங்களின் எச்சில் துப்பத் தடை, கூட்டம்கூட தடை என அனைத்தும் தீவிரமாக கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தியது. ஆனால், மக்கள் இதனை பெரிதாக பின்பற்றுவத்தில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில் பலருக்கும் கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது.

இதனால், தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, கொரோனா கால விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் வித்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அரசாணையின் படி, பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் ரூ,200 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ,500 அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகள், ஸ்பா, சலூன், வணிக நிறுவனங்கள், வாகனங்களுக்கு ரூ.5000 அபராதம் என்றும், வழிமுறைகளை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தொகையை பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளருக்கு மேல் உள்ள அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்க்கு மேல் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்க்கு மேல் உள்ள அதிகாரிகள் வசூலிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் தமிழகம் முழுவதும் ஒலிப்பெருக்கி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

click me!