
பொதுவாக குழந்தைகளின் சருமம் ரொம்பவே உணர்திறன் கொண்டது. எனவே குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. இத்தகைய சூழ்நிலையில், பிறந்த குழந்தை முதல் 3 வயது குழந்தை வரை டயப்பர் போடாமல் அம்மாக்கள் வெளியில் அழைத்துச் செல்வதில்லை. இரவில் கூட குழந்தைக்கு டயப்பர் போடுகிறார்கள்.
ஆனால் டயப்பர் குழந்தையின் சருமத்தை பாதிக்கும் என்று பல பெற்றோருக்கு தெரிவதில்லை. குழந்தைக்கு டையப்பர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் குழந்தையின் சருமத்தில் சிவப்பு திட்டுக்கள், எரிச்சல் ஒட்டும் புடைப்புகள் போன்றவை உண்டாகும். அதுமட்டுமின்றி, டயப்பரில் குழந்தை சிறுநீர், மலம் கழிக்கும்போது நீண்ட நேரம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அது குழந்தையின் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்திவிடும். ஈஸ்ட் என்னும் தொற்று நோயால் ஏற்படும் இது குழந்தையின் தொடை, புட்டப் பகுதியை தான் அதிகமாக பாதிக்கும்.
இதை சரியாக கவனிக்காவிட்டால் அது மிக வேகமாக பரவி குழந்தையின் சருமத்தில் சிவப்பு புள்ளிகள், தடிப்புகள், புண்களை ஏற்படுத்திவிடும். அது குழந்தையின் இடுப்பு முதல் கால் வரை பரவி விடும். இந்நிலையில், குழந்தைக்கு டயப்பர் போடுவதை தவிர்க்க முடியாது என்றால், குழந்தைக்கு டயப்பர் ரேஷஸ் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைக்கு டயப்பர் சொரியைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள் ;
1. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை எதிர்ப்பு போராட்டம் பண்புகள் உள்ளன. மேலும் இது இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். எந்தவித பக்கவிளைவும் இல்லாததால் குழந்தையின் சருமத்திற்கு இதை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் குழந்தையின் பாதிக்கப்பட்ட இடத்தை சூடான தண்ணீரால் கழுவி மெல்லிய துணியால் துடைக்கவும். பிறகு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ரேஷஸ் மீது தடவவும். குழந்தை இயற்கை உபாதை கழித்த ஒவ்வொரு முறையும் இப்படி நீங்கள் போட்டு வந்தால் டயப்பரால் ஏற்பட்ட அரிப்பு விரைவில் சரியாகும்.
2. தயிர்
டயப்பரால் குழந்தைக்கு வந்த அரிப்பு வலி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும். அந்த எரிச்சலை தணிக்க தயிர் உதவும். இதற்கு குழந்தையை நன்கு சுத்தம் செய்த பிறகு பாதிக்கப்பட்ட இடத்தில் தயிரை தடவவும். தயிர் காய்ந்ததும் சூடான நீரைக் கொண்டு சுத்தம் செய்யவும். பிறகு தேங்காய் எண்ணெயை போடவும்.
3. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை நேரடியாக குழந்தையின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் அதில் இருக்கும் மஞ்சள் திரவமானது குழந்தையின் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். எனவே கற்றாழை ஜெல்லை வீட்டில் தயாரித்து அதை குழந்தையின் சருமத்தின் மீது தடவும். இதனால் அரிப்பு, தடுப்புகளை மறைக்க உதவும். கற்றாழை பயன்பாட்டிற்கு பிறகு நெய் தடவவும். இது சருமத்தை மென்மையாக மாற்றும்.
ரேஷஸ் இருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை:
- குழந்தைக்கு டயப்பரால் ரேஷஸ் ஏற்பட்டால் போட வேண்டாம்.
- குழந்தையின் சருமத்தை இறுக்கமாக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். மெல்லிய ஆடைகளை அணிவிக்கவும்.
- ரேஷஸ் அதிகமாக இருந்தால் குழந்தை இயற்கை உபாதை கழித்த பிறகு ஒவ்வொரு முறையும் சூடான நீரல் குழந்தையின் சருமத்தை துடைக்கவும்.
- குழந்தைக்கு கண்டிப்பாக போட வேண்டும் என்ற சூழல் வரும் போது முதலில் தொடை மற்றும் புட்டம் பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவி பிறகு டயபர் போடவும். இதனால் பாதிப்பு அதிகரிக்காது.
- ஒருவேளை இதையும் தாண்டி டயப்பர் ரேஷஸ் அதிகமானால் குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.