உங்களுக்கு அதிகமாக பசிக்கிறதா? விபரீதம் தெரிந்து கொள்ளுங்கள்...

First Published Jun 1, 2017, 10:53 AM IST
Highlights
Eating disorder disorder problem - some information about that order problem


உண்ணுதல் கோளாறு(Eating Disorder) என்பது தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது அல்லது குறைவதேயாகும்.

குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பல்வேறு காரணிகளால் உண்ணுதல் கோளாறு உருவாக வாய்ப்பு உள்ளன.

காரணம்

ஒரு நபர் முதலில் குறைந்த அளவு அல்லது அதிக அளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு.

இக்கோளாறினால் அவதிப்படும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும் தென்படுகின்றன.

அவை, மன உளச்சல், உடல் எடை குறித்த அச்சம், தாழ்வு மனப்பான்மை மற்றும் குடும்ப சூழல்கள் என்பவையாகும்.

அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கோளாறு என்பது பெரும்பசி நோயைப் போலவே இருக்கும், ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டபின், அதை வெளியேற்ற முயலமாட்டார்.

இதனால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக பருமனாகவே காணப்படுவார். இது பொதுவாக பெண்களைவிட, ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.

அறிகுறிகள்

உண்ணுதல் கோளாறு இருக்கும் நபர்கள், பெரும்பாலானோரை விடவும் அதிக உணவை வேகமாக சாப்பிடுவார்கள்.

அதிகமாக சாப்பிடுவது அல்லது உணவை வெறுப்பது அஜீரணக் கோளாறை உருவாக்கும் உணவு வகைகளை விரும்பி எடுத்துக்கொள்வது வழக்கத்திற்கு மாறான நேரங்களில் சாப்பிடுவது இயல்பை விட வேகமாக சாப்பிடுவது
பசி எடுக்காத போதும் அளவுக்கு அதிகமாக உண்பது பிறர் காணாதவாறு தனியாக அதிகம் சாப்பிடுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மிதமிஞ்சி நோய் எனப்படும்.

நோய் கண்டறிதல்

உண்ணுதல் கோளாறு என்பது மருத்துவத்தால் குணப்படுத்த கூடிய ஒரு வியாதியே. இந்த நோயானது பெரும்பாலும் மனச்சோர்வு, போதை மருந்து நாட்டம் உள்ளிட்ட பிற காரணிகளுடன் பிணைந்தே காணப்படும்.

சில அறிகுறிகளை உதாசீனம் செய்யும் நோயாளிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தலையும் இது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

click me!