வாவ் !! கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup ! காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் !!

Published : Oct 18, 2019, 08:06 PM IST
வாவ் !! கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup !  காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் !!

சுருக்கம்

காபி போன்ற சூடான மற்றும் குளிர்பானங்களை வழங்கும் கப்புகளை சாப்பிடும் வகையில் Eat  cup அறிமுகமாகி  உள்ளது. இதனால்  கப்பை அப்படியே நாம் சாப்பிட்டு விடலாம்.  

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தாமதமாக ஏற்பட்டாலும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவில் பல மாநில அரசுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. உதாரணமாக தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் கேரிபேக்குகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக பேப்பர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதனை காட்டிலும் வித்தியாசமான மற்றும் உடல் நலத்துக்கும் ஆற்றல் அளிக்கும் வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஜெனோமேலேப்ஸ் என்ற நிறுவனம் இயற்கையான தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கப்புகளை அறிமுகம் செய்துள்ளது. தான் தயாரித்துள்ள அந்த கிளாசுக்கு Eat cup என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளுக்கு மாற்றாக Eat cup இருக்கும். இந்த கப்புகள் முழுக்க இயற்கை தானியங்களால் தயாரிக்கப்படுவது. மேலும் செயற்கையான கோட்டிங் எதுவும் இருக்காது. சூடான அல்லது குளிர்பானம் ஊற்றியது முதல் 40 நிமிடம் வரை Eat cup மிருதுவாகவே இருக்கும். 

மேலும் அந்த கப்பால் பானத்தின் சுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. ரூ.25 கோடி முதலீட்டில் இதற்காக ஆலை அமைக்க உள்ளோம் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்