எத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா?

By ezhil mozhiFirst Published Oct 18, 2019, 6:46 PM IST
Highlights

திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது மேலும் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா? 

தற்போது மழைக்காலம் என்பதால் முன்பு எப்போதையும் விட டெங்கு மற்றும் ஒருசில மர்ம காய்ச்சல் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பின்னர் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளதால் அதன் மூலம் டெங்கு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. வீட்டை சுற்றி தேங்கி இருக்கும் தண்ணீர் குட்டைகள், தயிர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே மழைக்காலத்தில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது மேலும் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது காஞ்சிபுரம் தூத்துக்குடி தர்மபுரி சென்னை வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழகம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்து உள்ளார். 

click me!