
குங்குமப்பூவில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இது எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியது. குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு இது உகந்ததாக கருதப்படுகிறது. குங்குமப்பூவில் உள்ள பண்புகள் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கின்றன. அப்படியான, குங்குமப்பூவில் கலப்படம் இருந்தால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும்.
எனவே, உண்மையான குங்குமப்பூவிற்கும் போலி குங்குமப்பூவிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம்.
அனைத்து மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. குங்குமப்பூ உலகின் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். மற்ற பொருட்கலை போலவே, சந்தையில் போலி குங்குமப்பூவும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் உண்மையான குங்குமப்பூவை அடையாளம் காண்பது சற்று கடினம்.
இந்தியாவில், காஷ்மீரில் குங்குமப்பூ அதிகம் பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ விலை உயர்ந்தது என்பதோடு மிகவும் பயனுள்ளது, எனவே குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அதிக லாபம் பெற அதில் கலப்படம் செய்கிறார்கள். கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூ நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே உண்மையான மற்றும் போலி குங்குமப்பூவை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிந்து கொள்வோம்.
குங்குமப்பூ:
குங்குமப்பூவோட மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமா பூக்கும். இரண்டு லட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும்.
குங்குமப்பூ உலகின் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இந்தியாவில், காஷ்மீரில் குங்குமப்பூ அதிகம் பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ விலை உயர்ந்தது என்பதோடு மிகவும் பயனுள்ளது, எனவே குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அதிக லாபம் பெற அதில் கலப்படம் செய்கிறார்கள். கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூ நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே உண்மையான மற்றும் போலி குங்குமப்பூவை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிந்து கொள்வோம்.
குங்குமப்பூவில் கலப்படத்திற்காக மக்கள் சோள முடியைப் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தி சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை உட்கொள்வது வயிற்றில் கோளாறு, வாயு மற்றும் வீக்கம் உண்டாக்கும். எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மசாலா மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறியும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே கண்டறிவது எப்படி..?
குங்குமப்பூவில் கலப்படத்தைக் கண்டறிய, ஒரு கிளாஸை எடுத்து, அதில் 70 முதல் 80 டிகிரி வரை சூடாக்கப்பட்ட தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு அதில் சில குங்குமப்பூ இதழ்களை வைக்கவும். உங்கள் குங்குமப்பூ உண்மையானது என்றால், தண்ணீரில் குங்குமப்பூவின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். கலப்படம் என்றால் உடனே மறைந்து விடும்.
சந்தையில் குங்குமப்பூவை வாங்கும் முன், குங்குமப்பூவை ருசித்து அதன் சுவையால் அடையாளம் காணவும். இதற்கு முதலில் இரண்டு குங்குமப்பூவை நாக்கில் வைத்து லேசாக மென்று சாப்பிடுங்கள். குங்குமப்பூவின் சுவை மிகவும் இனிமையாக இருப்பதாக நீங்கள் கண்டால், உங்கள் குங்குமப்பூ போலியானது என்று அர்த்தம். குங்குமப்பூவின் வாசனை இனிமையாக இருக்கலாம் ஆனால் அதன் சுவை லேசான கசப்பாக இருக்கும். விலை உயர்ந்த குங்குமப்பூ, ஒருவேளை உங்களுக்கு விலை குறைவா குங்குமப்பூ கிடைச்சா நிச்சயம் அது தரமான குங்குமப்பூவா இருக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.