
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகின்றது. அவர்களுக்கு ராஜ யோகம் கைகூடி வரும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் தலைகீழ் இயக்கத்தின் இந்த காலம் பிரச்சனைகளின் காலமாக இருக்கும். இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கிரக நிலையும் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது.பிப்ரவரி 26-ம் தேதி முதல் சனியின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார்.
சனி பகவானின் அருள் கிடைத்துவிட்டால், ஆண்டியும் அரசனாகலாம். ஆகையால், சனியின் சிறு மாற்றமும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது சொந்த ராசியான மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி இன்று அதாவது பிப்ரவரி 26ம் தேதி முதல் உதயமாகிறார். சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகின்றது.
சனி பகவானின் உதயம் சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம், பதவி, புகழ் என அனைத்தும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்.
மேஷம்:
சனியின் உதயம் மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. ராஜ யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். பல சாதனைகளை இவர்கள் இந்த காலத்தில் செய்வார்கள். குறிப்பாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனியின் உதயத்தால் ராஜயோகம் உருவாகும். தொழில், வியாபாரம் இரண்டிலும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பண வரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் வெற்றியைத் தரும். பண வரவால் நன்மை உண்டாகும். கூட்டுப் பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமண வாழ்க்கை / காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
துலாம்:
சனியின் உதயத்தால் துலா ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்கள் உண்டாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
கும்பம்:
சனியின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயத்தைத் தரும். கும்ப ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் முழு ஆதரவைத் தரும். சென்ற இடங்களில் எல்லாம் மரியாதை கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்ற நேரமாக உள்ளது. சனியின் உதயம் இவர்களது திரிகோண ராஜயோகத்தை உண்டாக்குகிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவார்கள். நீங்கள் செய்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். பாராட்டும் மரியாதையும் பெறுவீர்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பணம் சாதகமாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு மகர ராசியில் சனி நுழைவது பெரிய சாதனையாக இருக்கும். தடைபட்டிருந்த முக்கியமான வேலைகள் இப்போது முடியும். குறிப்பாக, மருத்துவம், ராணுவம் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடையவர்கள் அல்லது இந்தத் துறைகளில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.