Fried garlic: வறுத்த பூண்டு ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்....தினமும் எப்படி சாப்பிட்ட வேண்டும்...!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 24, 2022, 01:16 PM ISTUpdated : Feb 24, 2022, 01:34 PM IST
Fried garlic: வறுத்த பூண்டு ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்....தினமும் எப்படி சாப்பிட்ட வேண்டும்...!!

சுருக்கம்

ஆண்கள் வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சிறந்த உணவாக இருக்கிறது பூண்டு. தினமும் 2 பூண்டுப் பற்களை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். பொதுவாக பூண்டு அனைவருக்கும் ஆரோக்கியமானது என்றாலும் கூட இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிறந்த உணவான பூண்டு ஆண்களுக்கு ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய் நோய், மாரடைப்பு, பெரும் தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுப்பதோடு, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது. மேலும் எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.

பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்களால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. பூண்டை பச்சையாகவோ அல்லது உணவிலோ சேர்த்து கொள்வதை தவிர வறுத்து சாப்பிடுவதாலும் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

ஆண்கள் வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்..

வறுத்த பூண்டின் நன்மைகள்:

1. வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே வறுத்த பூண்டை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பல இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறைக்கப்படலாம்.

2. வறுத்த பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றில் ரத்தம் உறைவதை தடுக்க உதவுகிறது.

 3. வறுத்த பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றில் ரத்தம் உறைவதை தடுக்க உதவுகிறது.

4. வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே வறுத்த பூண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

5. நீங்கள் சோர்வாக உணரும் போது மற்றும் உங்கள் எனர்ஜி அளவு குறைவாக இருப்பதை போல இருக்கும் போது, வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் வறுத்த பூண்டை சாப்பிடுவது அதிக பலன் தரும்.

6. வறுத்த பூண்டு சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வறுத்த பூண்டு உதவுகிறது.

7. இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பி இருக்கும் பூண்டைநீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் 2 அல்லது மூன்று 3 பூண்டு பல்லை எடுத்து கொள்ளலாம். வறுத்த பூண்டு வேண்டும் என்றால், கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பூண்டு பல்லை நன்கு வதக்கவும். பின் சூடாறிய பின் 1-2 பூண்டு பற்களை நசுக்கி, 1 டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும். பூண்டை முதலில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க..தலையில் வழுக்கையை தவிர்க்க பயன்படுத்தக்கூடாத 5 எண்ணெய்கள்! இனி அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்