இனி சிக்கன் வாங்கினா ஒன் டைம் இப்படி வெள்ளை குருமா செய்ங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்!

By Kalai Selvi  |  First Published May 31, 2024, 1:56 PM IST

இப்போது இந்த பதிவில் வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்..


சிக்கன் என்ற பெயரை கேட்டாலோ போதும் பலரது நாவில் எச்சில் ஊறும். சிக்கனை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. சிக்கனில் பல வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், இந்த பதிவில் உங்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம்.

அது வேறு ஏதுமில்லை, 'வெள்ளை சிக்கன் குருமா' தான். இந்த வெள்ளை சிக்கன் குருமாவை நீங்கள் சாதம், இட்லி, தோசை, ஆப்பம், பூரி, சப்பாத்தி, இடியாப்பம் என எதற்கு வேண்டுமானாலும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது. இந்த வெள்ளை சிக்கன் குருமா சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த வெள்ளை சிக்கன் குருமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

Tap to resize

Latest Videos

உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்தால் கண்டிப்பாக இந்த வெள்ளை குருமா செய்து சாப்பிடுங்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் வெள்ளை சிக்கன் குருமா செய்வது எப்படி என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டியான 'சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்' செய்வது எப்படி?

வெள்ளை சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 4
(இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தனியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்)

மசாலாவிற்கு..
தேங்காய் - அரை கப் (துருவியது)
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
முந்திரி – 8
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
(இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்)

தாளிப்பதற்கு..
சிக்கன் - கால் கிலோ
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
ஸ்டார் சோம்பு - 1
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -  1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு - சுவைகேற்ப 

இதையும் படிங்க:  நாவூற வைக்கும் காரசாரமான 'சிக்கன் உப்பு கறி' டேஸ்ட் சும்மா அள்ளும் இப்படி செஞ்சா...

வெள்ளை சிக்கன் குருமா செய்ய முதலில், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் எடுத்து வைத்த பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை ஸ்டார் சோம்பு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இப்போது, ஏற்கனவே அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை இதனுடன் கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி நன்கு குழைந்ததும், அதில் ஏற்கனவே, கழுவி வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். பிறகு குக்கரை மூடி5 விசில் வைத்து இறக்கி பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியே மேலே தூவவும். அவ்வளவுதான் வெள்ளை சிக்கன் குருமா ரெடி..!!

இந்த ரெசிபியை ஒரு முறை உங்களது வீட்டில் செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!