அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காளான் பிரியாணி சுவையாக எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பிரியாணி என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. எல்லாருக்கும் மிகவும் பிடித்த ரெசிபி எதுவென்றால் அது பிரியாணி தான். பிரியாணியில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் காளான் பிரியாணி.
காளான் பிரியாணி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி செய்வது மிகவும் எளிது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காளான் பிரியாணி சுவையாக எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!
காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
காளான் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 3 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 3
இலவங்கம் - 2
கிராம்பு - 5
தேங்காய் பால் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
தயிர் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
கொத்தமல்லி - 1/4 கப்
புதினா - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: மீல் மேக்கரில் ஒரு முறை இப்படி கிரேவி செய்ங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்!
செய்முறை:
காளான் பிரியாணி செய்ய முதலில் எடுத்து வைத்த கால்ானை நன்கு சுத்தப்படுத்தி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு எடுத்து வைத்த அரிசியையும் தண்ணீரில் நன்கு கழுவி ஊற வைக்கவும்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பிரியாணியில் கிராம்பு, இலைகள் இலவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன் பின் நீளமாக நறுக்கி வைத்த வெங்காயத்தை இதனுடன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். வெங்காயம் நன்கு வெந்ததும் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போன பிறகும் தக்காளி வெந்த பிறகும் காளானை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வையுங்கள். கிரேவி பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது அரிசியை இதனுடன் சேர்த்து மூன்று கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கினால் டேஸ்டான காளான் பிரியாணி ரெடி!! இதற்கு சைட் டிஷ் ஆக நீங்கள் ரைத்தா சிக்கன் ப்ரை (அ) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வைத்து சாப்பிடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் உங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D