Durga Devi: வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், திருமணத் தடை நீங்கும் ...துர்க்கை அம்மனை வழிபடும் பலன்கள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 21, 2022, 06:54 AM IST
Durga Devi: வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், திருமணத் தடை நீங்கும் ...துர்க்கை அம்மனை வழிபடும் பலன்கள்..!!

சுருக்கம்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், திருமணத் தடை நீங்க, துர்க்கை அம்மனை வாரத்தில் 7 நாளும் வழிபடும் பலன்கள். கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்க்க முடியாத கோட்டை என்று பொருள். துர்கையை சிலர் துர்கதினாஷனி என்றும் அழைப்பார்கள் அதன் பொருள் அனைத்து துயரங்களையும் நீக்குபவர் என்பதாகும். நம்மை ஒரு தாய் போல பாதுகாப்பார். ஆனால், நாம் தவறு செய்யும்போது தண்டிப்ப வரும் இவர்தான்.

துர்கா தேவி தியான மந்திரம் 

''ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன் லோகாயந்த்ரா சன்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான் நாம்'' மற்ற துர்கை மந்திரங்களை கூறும் முன் இந்த மந்திரத்தை கூறி துர்கை அம்மனை வழிபட தொடங்குவது நல்லது என கூறப்படுகிறது. இந்த மந்திரம் நம் மனதை ஒருநிலைபடுத்தவும், வாழ்க்கையில் கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.

துர்க்கை அம்மனை திங்கள் கிழமை வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதே போல் துர்க்கை அம்மனை, விரதம் இருந்து ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட வேளையில் வழிபாடு செய்து வந்தால், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபட வேண்டிய நேரம் பற்றிய விவரத்தைப் பார்க்கலாம்.

திங்கள்: 

திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

செவ்வாய்: 

ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

புதன்: 

மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால் நீங்கும்.

வியாழன்: 

வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

வெள்ளி: 

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

சனி: 

சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

ஞாயிறு: 

துர்க்கை சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண் டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!