இனி "16 வயதிலேயே லைசன்ஸ்"..! மத்திய அரசு அதிரடி.! பட் ஒன் கண்டிஷன்..!

By ezhil mozhiFirst Published Feb 8, 2019, 2:37 PM IST
Highlights

50 சிசி வேகம் கொண்டமின்சார ஸ்கூட்டரை பயன்படுத்த 16 வயதிலேயே லைசன்ஸ் வழங்க சென்ற ஆண்டே ஆணை பிறப்பித்துள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

இனி "16 வயதிலேயே லைசன்ஸ்"..! மத்திய அரசு  அதிரடி.! பட் ஒன் கண்டிஷன்..!  

50 சிசி வேகம் கொண்ட மின்சார ஸ்கூட்டரை பயன்படுத்த 16 வயதிலேயே லைசன்ஸ் வழங்க சென்ற ஆண்டே ஆணை பிறப்பித்துள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்

தற்போது பயன்பாட்டில் உள்ள 70 சிசி இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், 50 சிசி வேகம் கொண்ட மின்சார ஸ்கூட்டரையோ அல்லது அதற்கு குறைவான சிசி கொண்ட மின்சார  ஸ்கூட்டர் பயப்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இந்த வாகனத்தை பயனப்டுத்த16 வயதிலேயே லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போது 50 சிசி வேகம் கொண்ட மின்சார  ஸ்கூட்டர் இல்லாததால், 70 கிலோ மீட்டர் வேகத்துக்கு செல்லும் மின்சார ஸ்கூட்டரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம்,16 முதல் 18 வயது கொண்டவர்கள், கியர் இல்லாத மின்சார ஸ்கூட்டர் ஓட்டுவதற்கான லைசன்ஸை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அனைத்து தகவலையும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தெரிவித்து உள்ளார். மேலும் கடந்த டிசம்பர் மாதமே  இதற்கான ஆணையை மத்திய அரசு பிறப்பித்து உள்ளதாகவும்  தெரிவித்து உள்ளார்.

click me!