கலெக்டர் மகனின் திருமண செலவு சாப்பாட்டோடு சேர்த்து வெறும் 18 ஆயிரம்..! யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா..?

Published : Feb 08, 2019, 12:57 PM ISTUpdated : Feb 08, 2019, 01:00 PM IST
கலெக்டர் மகனின் திருமண செலவு சாப்பாட்டோடு சேர்த்து வெறும் 18 ஆயிரம்..! யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா..?

சுருக்கம்

திருமணம் என்றாலே கோலாகலமாக நடந்த வேண்டும் என்று தானே அனைவரும் நினைப்பார்கள். அதுவும் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய விஷயமாகவும், ஒரே ஒரு முறை மட்டுமே இது போன்று விசேஷமாக நடத்த வேண்டும் என்றால் அது திருமணம் தானே..!

ஏழை பணக்காரன் என யாராக இருந்தாலும் திருமணத்தை மட்டும் ஊரறிய விசேஷமாக நடத்த வேண்டும் என தான் அனைவரும் நினைப்பார்கள். இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, வெறும் பதினெட்டாயிரம் தன் செலவில் தன் மகனின் திருமணத்தை நடத்தி அசத்தி உள்ளார் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாாி பட்னாலா பசந்த் குமாா். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

இந்நிலையில், தனது மகனின் திருமணத்தை குறைந்த செலவில் நடத்தி முடிக்க திட்டமிட்டார். அதன் படி, வரும் 10 ஆம் தேதி நடக்க உள்ள மகனின் திருமணத்தில், தங்களது உறவினரின் உணவு செலவு கூட இதே பட்ஜெட்டில் சேர்த்து இவ்வளவு எளிதாக நடத்த உள்ளார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்னதாக, 2017ம் ஆண்டு தன் மகளுக்கு நடத்திய திருமணத்தில் வெறும் 16 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே செலவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐஏஎஸ் அதிகாரி நினைத்தால் எப்படி வேண்டும் என்றாலும் ஆஹா ஓஹோ என ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்க முடியும். ஆனால் அதிகாரியின் எளிய முறையிலான இந்த திருமணத்திற்கு மக்கள் அனைவரும் தங்கள வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!