தியேட்டர் அனுமதி இல்லையென்றால் YOU TUBE-இல் வெளியிடுவேன்.. ! இயக்குனர் மோகனின் கருத்தால் சூடேறும் "போராளீஸ்"..!

By ezhil mozhiFirst Published Jan 7, 2020, 4:38 PM IST
Highlights

சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

தியேட்டர் அனுமதி இல்லையென்றால்  இல் வெளியிடுவேன்..! போராளீசை சூடேற்றும் இயக்குனர் மோகன்..! 

சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி எனவும் சொல்லி போஸ்டர் வெளியான போதே திரெளபதி பரபரப்பை கிளப்பப்போவது உறுதி எனமுடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் வந்தது. 

இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் தியேட்டரில் படம் வெளியிட தடை வந்தால், யூட்யூபில்வெளியிடுவோம் என அதிரடி கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் திரெளபதி படத்திற்கு பெருமளவு ஆதரவு இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த பட குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது.  எனவே இந்த படம் வெளியானால் வெற்றி பெரும் என்பதால் எந்த மாற்றமும் கிடையாது. 

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகும் முதல் படம் இதுவாகும். தனது முதல் படமான அட்டக்கத்தி படத்திலிருந்து மெட்ராஸ், கபாலி, காலா என தான் இயக்கிய படங்களில் ஒரு தலைசார்பான சமூகத்தை திணித்திருந்தார் பா.ரஞ்சித். 

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக திரெளபதி படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது  கிளம்பி உள்ளது.

click me!