தர்பார் போஸ்டரில் "முதல்வரான ரஜினிகாந்த்"..! இப்பவே ஓவரா துள்ளும் ரசிகர்கள்..! எது ரீலு..? எது ரியாலிட்டி..?

By ezhil mozhiFirst Published Jan 7, 2020, 2:07 PM IST
Highlights

மிகப்பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், புரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் "தர்பார்" படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. 

தர்பார் போஸ்டரில் "முதல்வரான ரஜினிகாந்த்"..! ரியாலிட்டி தெரியாமல் அரசியலையும் சினிமாவையும் ஒரே பார்வையில் பார்க்கும் ரசிகர்கள்..! 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படம், பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான "தர்பார்" படத்தின் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

மிகப்பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், புரோமோஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் "தர்பார்" படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. ரஜினிகாந்தின் 167வது படமான இதற்கு சென்சாரில் U/A சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. 

படம் ரிலீசுக்காக, சேலத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்கம் முன்பு விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதி கேட்டு, ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் சேலம் வருவாய் கோட்டாட்சியர், மேற்கு வட்டாட்சியர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

ரஜினி நடித்து வெளியாக உள்ள தர்பார் படத்தை வரவேற்கும் விதமாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி அந்த தேர்தலில் போட்டியிட்டு ரஜினிகாந்த் மாபெரும் வெற்றி பெற்று தலைமை செயலகத்தில் முதல்வராக அமர்வார் என்ற எதிர்பார்ப்பை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கிளப்பும் வகையில் மிக வித்தியாசமாக செட் போட்டு உள்ளனர்.

அதில் "தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்" 2021 தமிழக தர்பார் என எழுதப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஒரு சில விமர்சனங்களும் எழுந்து உள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும்தான் சினிமாக்காரர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதும், சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்ப்பதும் அதிகமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தில் ஒருவரை ஹீரோவாக பார்த்துவிட்டால் அவர்கள்  நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றுதான் மக்கள் தங்களது மனதில் பதிய வைக்கின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் கமல், விஜய்,சீமான், பிரகாஷ்ராஜ்,விஷால்,டி ராஜேந்தர், செந்தில், ரஞ்சித்,  வாகை சந்திரசேகர், ராதாரவி, ராதிகா, சரத்குமார், நடிகர் கார்த்திக், நடிகை நமிதா, காயத்ரி ரகுராம், விந்தியா, குஷ்பூ, இமான் அண்ணாச்சி, கோவை சரளா,ஸ்ரீபிரியா, கௌதமி,
சினேகன்,உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ....


  
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என இருந்தாலும் பிரபலங்கள் மிக எளிதாக அரசியலில் ஈடுபடுகின்றனர். அதற்கு காரணம் அவர்களுடைய ரசிகர்கள் அப்படியே தொண்டர்களாக மாறுவதே முதற்காரணம்... இதில் சற்று சிந்தித்து பார்த்தோமேயானால், அதில் உள்ள ரியாலிட்டி என்னவென்று புரிந்து கொள்ளலாம். தற்போது அரசியல்வாதியாக இருக்கக்கூடிய சினி பிரபலங்கள் அவர்கள் நடிக்கக்கூடிய திரைப்படங்களில் காதல் காட்சி இருந்தாலும் அல்லது மிகப் பெரிய ஆளுமை மிக்க பதவியில் இருப்பது போன்ற காட்சி இருந்தாலோ மக்களுக்கு நன்மை செய்வது போன்ற பல சீன்ஸ் இடம்பெறும். அதை பார்க்கும்போது நம்மவர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் உண்மையில் பல கோடிக்கு அதிபராக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு படைத்தவராக இருந்தாலும் நன்மை செய்ய அவர்களுடைய சொந்த பணத்தை எடுப்பார்களா?  கிடையாது. இருந்தாலும் ரசிகர்களின் ஆரவாரமும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டு ஃப்ரீ ப்ரோமோஷன் கொடுத்து ஒரு விதமான தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதே வேலையாக வைத்துள்ளனர்.

அவ்வளவு ஏன் சினிமாவில் இடம்பெறும் காதல் காட்சிகளில் சாதி மதம் இனம் பார்க்காமல், ஏழை பணக்காரர் என பாகுபாடில்லாமல் ஒரு அழகான பெண்ணை அல்லது நல்ல மனதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் இடம் பெறும். இதை அப்படியே நிஜவாழ்க்கையில் ஒப்பிட்டு பாருங்களேன். ஒருவராவது ஹீரோவாக இருந்தால் ஒரு ஏழைப் பெண்ணை திருமணம் செய்துள்ளார்களா அல்லது கதாநாயகியாக இருந்தால் சாதாரண மனிதரை காதலித்து ஏற்றுக் கொள்கிறார்களா ?கிடையவே கிடையாது. ஆனால் அரசியலுக்கு மட்டும் ஆர்வமாக வந்து விடுவார்கள். ரசிகர்கள் அவர்களை ஹீரோவாக பார்க்கக்கூடிய பார்வை மாறி தலைவனாக பார்க்கக்கூடிய எண்ணம் புகுந்து விடும்.

இதன் மூலம் எது சரி எது தவறு அரசியலுக்கு யார் வேண்டும் உண்மையில் மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என சிந்தித்து பார்க்கவேண்டும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்றைய இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பெரும் தலைவர்களும் பல பிரபலங்களும் பேசும்போது இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான உற்சாகம் ஏற்படும். ஆனால் அவர்களிடம் திறமை இருந்தாலும் பணமும் அனுபவமும் இல்லாததால் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். காரணம் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் மனநிலையில், நம்ம மக்கள் இருப்பதுவும் ஒரு காரணம் என சொல்லலாம்.

எனவே ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் வருமா என யோசிப்பதை காட்டிலும் மாற்றும் ஏற்பட  சற்று மனம் மாறி சிந்திப்பதே ஒரு தீர்வாக அமையும் என்ற புரிதல் வேண்டும். இனியாவதஹு சமூதாயத்தில் மாற்றம் வருமா..?

click me!