இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டைப் பிறழ்வுடன் கூடிய வைரஸ்.. மூன்றில் ஒன்றான டேஞ்சர் டெல்டா..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2021, 4:45 PM IST
Highlights

இந்தியாவில் இரட்டைப் பிறழ்வுடன் கூடிய வைரஸ் தொற்றுக்கு  உலக சுகாதார அமைப்பு டெல்டா எனப் பெயர் சூட்டியுள்ளது. 

இந்தியாவில் இரட்டைப் பிறழ்வுடன் கூடிய வைரஸ் தொற்றுக்கு  உலக சுகாதார அமைப்பு டெல்டா எனப் பெயர் சூட்டியுள்ளது. 

2020 அக்டோபரில் மகாராஸ்ட்ரா மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், டெல்டா ரக வைரஸ், இந்தியா, கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களையும் கவலையளிக்கும் ரகம் என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது.

செவ்வாயன்று, இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது. கப்பா உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால், அதனை கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை. பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
 

click me!