வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவுகிறதா? டெல்லி எய்ம்ஸ் பரபரப்பு விளக்கம்..!

By vinoth kumarFirst Published May 28, 2021, 6:30 PM IST
Highlights

வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பரவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதற்கு டெல்லி எய்ம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 

வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பரவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதற்கு டெல்லி எய்ம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 

கருப்பு பூஞ்சை நோய் என்பது மியூகோர்மைக்ரோசிஸ் என்ற நுண்ணிய பூஞ்சை கிருமியால் பரவுகிறது. சாதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இந்த நோய் தாக்கும் என்றாலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஸ்டீராய்டு மருந்தை அதிகளவில் எடுத்துக்கொண்டவர்களை இந்நோய் எளிதில் தாக்கும் என கூறப்படுகிறது. 

குறிப்பாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உண்டாகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் பலருக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டீராய்டு மருந்தை உடன் எடுத்துக் கொள்ளும் போது கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் கண்களை பாதித்து அதன் பிறகு மூளைக்கும் பரவி இறப்புக்கு காரணமாகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 7000க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த கருப்பு பூஞ்சை விவகாரத்தினால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் வெங்காயத்தின் மூலமாகவும், வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ரப்பரில் காணப்படும் கருப்பு பூஞ்சை ஆகியவை மூலம் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. ஆனால், இதனை மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(ஏஐஎம்எஸ்) வெளியிட்ட அறிவிப்பில்;- வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்றானது காய்கறிகள் மற்றும் பொருட்கள் மூலம் பரவாது. வெங்காயத்தில் காணப்படும் கருப்பு மேற்புறத்தோலானது தரையில் வளரும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது மனிதர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை அல்ல. நீண்ட நேரம் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டாலோ அல்லது அதிக வெப்பநிலை காரணமாக இதுபோன்ற பாக்டீரியா உருவாகுவது இயல்பான ஒன்றுதான். எனவே பொதுமக்கள் அச்சப்படவேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!