Tamil New Year 2023 : தமிழ் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவை? செய்யக் கூடாதவை? முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 12, 2023, 10:51 PM IST

தமிழ் புத்தாண்டு அன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் ?, என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.


அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும். 

அன்றைய தினத்தில் நாம் அனைவரும்  புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாகும். வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம்.  தமிழ் புத்தாண்டு அன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் ?, என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

செய்ய வேண்டியவை:

வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும். முதல் நாள் இருவே ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைக்க வேண்டும். இது தவிர வேறு பழங்களும் வைக்கலாம். மேலும் இதோடு எலுமிச்சை பழம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு வைத்து, வீட்டில் இருக்கும் தங்க நகையும் வைக்க வேண்டும்.

தமிழ் புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும்.

இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லதாகும். இந்த நாளில் நீங்கள் குரு ஓரை பார்த்து தங்க நகை வாங்குவது, சுக்கிர ஹோரை பார்த்து வெள்ளி நகை வாங்குவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். கல்லுப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.

செய்யக் கூடாதவை:

வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்ற கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. வீண் விரயங்களை ஒருபொழுதும் செய்யக்கூடாது. யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது.புதிய பொருட்களை வாங்கலாம்.  அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.

புத்தாண்டு 2023 எப்போது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

click me!