பயன்படுத்திய தேயிலையை வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம் தெரியுமா..?

By Dinesh TGFirst Published Jan 24, 2023, 6:19 PM IST
Highlights

வீட்டில் டீ போட்ட பிறகு, அதற்காக பயன்படுத்தப்பட்ட தேயிலையை அப்படியே கழிப்பது பெரும்பாலான வீடுகளிலும் வழக்கம். ஆனால் அதை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 
 

இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் காலை எழுந்ததும் விழிப்பது என்பது தேயிலை பாட்டில்களில் தான். அதை திறந்து டீ போடப் போட, அந்த நாள் சுறுசுறுப்பாக தொடங்கும். நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேயிலை பயன்பாடு என்பது பரவலாக உள்ளது. அதனால் சேரும் குப்பைகளும் அதிகம். எனினும் இனிமேல் டீ போட்ட பிறகு, பயன்படுத்தப்பட்ட தேயிலை தூக்கிப் போடாமல் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம். செடி வளர்ப்பு முதல் அழகுக் குறிப்பு வரை பயன்படுத்தப்பட்ட தேயிலை வைத்து பல தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

சாலடுகள்

தேயிலையில் டீ மட்டும் தானே போட்டு குடித்திருப்போம். ஆனால் பயன்படுத்தப்பட்ட தேயிலைகளை வைத்து சாலட் தயாரிக்கவும். இது வெறும் சீசனிங்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சாலடுகளில் சேர்க்கப்படும் தேயிலைகள் பழையதாகி இருக்க வேண்டும். இதை நீங்கள் சாலடுகளில் சேர்த்து சாப்பிடும் போது, நல்ல ஃபிளேவர் கிடைக்கும்.

ஊறுகாய்

பயன்படுத்தப்பட்ட தேயிலையில் இருந்து ஊறுகாய் தயாரிக்கலாம். இது பலருக்கும் ஆச்சரியம் தரலாம். ஆனால் அதுதான் உண்மை. தேயிலை, எண்ணெய், எலுமிச்சை நீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஜாரில் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு இதை எடுத்து பார்த்தால் பிக்கிள் ரெடியா இருக்கும். படிக்கும் போது விசித்திரமாக தோன்றலாம். ஆனால் செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த ஊறுகாயை சாண்ட்விச், சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது வேறலெவலில் இருக்கும்.

சுத்தம்

சமையலறையில் கிளீனிங் விஷயங்களுக்கும் தேயிலை பயன்படுத்தலாம். திட்டுகள், காய்கறி கட்டிங் போர்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்ய தேயிலைகளை உபயோகிக்கலாம். அப்போது தேங்காய் நாறு எடுத்து தேய்த்தால், எல்லாமே பளபளப்பாகி விடும். பெரிய பாத்திரங்கள், அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்தவும் தேயிலையை பயன்படுத்தலாம்.

பாலிலுள்ள கலப்படத்தை இப்படியும் கண்டுப்பிடிக்கலாம்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

நாற்றம் போக்க

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வருவது எல்லாருடைய வீடுகளிலும் இருக்கக்கூடிய பிரச்னை தான். அதற்கு ஒரு மஸ்லின் துணியில், பயன்படுத்தப்பட்ட தேயிலையின் சாற்றை நனைக்க வேண்டும். அதை ஃபிர்ட்ஜுக்குள் வைத்தால் போது உடனடியாக துர்நாற்றம் போய்விடும். அதேபோன்று மைக்ரோ வேவ் ஓவனில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தை போக்கவும், இதே முறையை பயன்படுத்தலாம். 

ஃபிளேவர் ஏஜெண்ட்

சில உணவுசாதனங்கள் பேக் செய்யும்போது துர்நாற்றம் வீசலாம். அதனுடைய ஃப்ளேவரில் எந்தவித மாறுபாடும் ஏற்படுவதை தடுக்க தேயிலை தண்ணீரை தெளித்துவிடலாம். . குக்கீஸ், கேக்குகள், மஃபின்ஸ் ஆகிய பொருட்களை பேக் செய்யும் போது, கொஞ்சம் தேயிலைத் தண்ணீரை தெளிக்கலாம். இது பேக்ட் உணவுகளுக்கு நல்ல ப்ளேவரை வழங்கும். 
 

click me!