கழிப்பறை, சிங்க் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரைக் குடிப்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? இப்படி நினைப்பது கூட உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அழுக்கு நீரை பெல்ஜியம் உணவகத்தில் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தண்ணீர். மனிதர்கள் உணவின்றி 8 முதல் 21 நாட்கள் வரை கூட வாழ முடியும். ஆனால் நீரின்றி மூன்று நாட்களுக்கு மேல் வாழ முடியாது. நீருக்கு உயிர் கொடுக்கவும், உயிர் எடுக்கவும் ஆற்றல் உள்ளது. அதனால்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தண்ணீரை சேமிக்க தொடர்ந்து பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தண்ணீரை சேமிக்க மழை சேகரிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கழிவறை, சிங்க் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் உணவகம் பெல்ஜியத்தில் உள்ளது.
நீரியல் நிபுணர் லூனா லியோபோல்ட்,"நம் வாழ்நாளிலும் நம் குழந்தைகளின் வாழ்நாளிலும் தண்ணீர் மிகவும் முக்கியமான வளப் பிரச்சனை. பூமியில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்கு நமது தண்ணீரின் ஆரோக்கியம் ஒரு முக்கியமான அளவுகோலாகும்"என்கிறார். லியோபோல்ட் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழலின் நலனுக்காக தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், பெல்ஜியத்தில் உள்ள இந்த உணவகம் அதை செயல்படுத்த தயாராக உள்ளது.
டாய்லெட் நீரில் காபி!
பல நாடுகளில் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பெல்ஜியத்தில் உள்ள உணவகம் கழிவறை தண்ணீரை மறுசீரமைப்பு செய்து பயன்படுத்தி வருகிறது. ஆம், Gust'eaux உணவகம் அதன் வாடிக்கையாளர்களுக்காக கழிப்பறை தண்ணீரை மறுசுழற்சி செய்து பரிமாறுகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவறை நீர் ஐந்து நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த நீர் உணவகத்தில் குடிநீராகவும், காபி, பீர் காய்ச்சுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கழிப்பறை நீர் இரசாயனங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு தாவரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் பிறகு, மழை நீர் கலந்து சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த தண்ணீர் குடிக்கவும் காபி தயாரிக்கவும் பயன்படுகிறது.
பெல்ஜியத்தின் குர்னே நகராட்சியில் உள்ள கஸ்டாக்ஸ் (Gust'eaux) உணவகம் அதன் விருந்தினர்களுக்கு கழிப்பறை தண்ணீரை வழங்குகிறது. மறுபுறம், குடிநீர் சாதாரண தண்ணீரைப் போலவே சுவையாகவும், நிறமாகவோ இல்லை. Gust'eaux உணவகத்தின் விரிவான, ஐந்து-நிலை வடிகட்டுதல் நுட்பம், கழிவுநீரை குடிநீராக மாற்ற உதவுகிறது. இதை நுகர்வோருக்கு வழங்குவதற்கு முன்பு கனிம சேர்க்கை தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: மறந்தும் வீட்டில் இந்த செடிகளை வைக்காதீர்கள்.. மீறினால் வாழ்க்கை நரகமாகும்.. தரித்திரம் தாண்டவம் ஆடும்!
கனிமங்களை சேர்க்கும் உணவகம்
கழிவுநீரைக் குடிக்க சிலர் பயப்படுகிறார்கள். ஆனால் இந்த உணவகத்தில் பாதுகாப்பான நீர் மறுசுழற்சி அமைப்பு உள்ளது. முதலில் கழிவறை நீர் தாவர உரத்தைப் பயன்படுத்தி இரசாயன சுத்திகரிப்பு செய்கிறார்கள். தொடர்ந்து, முன்பே சேகரிக்கப்பட்ட மழை நீரில் ஒரு பகுதியை தண்ணீரில் கலந்து, மீதமுள்ளவை முற்றிலும் சுத்திகரிக்கப்படுகின்றன. இது குறித்து அந்த உணவக பிரதிநிதியிடம் கேட்டபோது, இந்த தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சுத்தமானது. இருப்பினும் ஆரோக்கியமாக இருக்க கனிமங்களை சேர்க்கிறோம் என்றார் கொஞ்சம் புன்னகையுடன். அவர்கள் தண்ணீரின் முக்கியத்துவம் அறிந்து செயல்படுகிறார்கள் என பாராட்டுக்கள் குவிகிறது.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் இணையத்தில் அதிகம் தேடும் விஷயம் என்ன தெரியுமா? ஆண்களுக்கு 'ஷாக்' கொடுக்கும் தகவல்