பெண்கள் இணையத்தில் அதிகம் தேடும் விஷயங்களைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பரபரப்பான இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்துவருகிறது. காலையில் எழுந்ததும் சிலர் முதலில் இண்டர்நெட் கனெக்சனை தான் ஆன் செய்கின்றனர். இணையவெளி அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தையும், வேடிக்கையான காணொலிகளையும், ஏராளமான தகவல்களையும் கொடுக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சந்தேகங்களை ஆன்லைனில் தேடி தெரிந்து கொள்வர். இதன் தேடல் விவரங்களை அவ்வப்போது கூகுள் வெளிடுவது வாடிக்கை.
இந்த தகவலின்படி, பெண்கள் தேடிய விஷயங்கள் கொஞ்சம் சுவாரசியமாக உள்ளது. இதையெல்லாமா கூகுளில் தேடுவார்கள் என்ற வகை தேடலும் இதில் அடக்கம். பல பெண்கள் கணவரை திருப்திபடுத்துவது எப்படி என தேடியிருக்கின்றனர். ஆண்களுக்கு என்ன செய்தால் பிடிக்கும், கணவரை எப்படி கையாள்வது, கணவருடன் நெருங்கி பழகுவது எப்படி போன்ற விஷயங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவதாக கூகுள் தகவல் கூறுகின்றன.
மாமியார் மனதில் இடம்பிடிக்கும் எண்ணம்!
திருமணமான பெண்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்தும், குழந்தை பிறக்கும் நேரம் என்ன என்றும் தேடியிருக்கின்றனர். மாமியார் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொண்டால் மாமியாருக்கு பிடிக்கும் என்றும் தேடியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு சென்றபடி, குடும்ப பொறுப்புகளை எப்படி கையாள வேண்டும் ஆகிய சந்தேகங்களை கூகுள் வழியாக பெண்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் அற்புத டீ... வெறும் வயிற்றில் இப்படி குடித்து பாருங்கள்!!
வேடிக்கையான கேள்வி..
கடந்தாண்டு கூகுளில் பெண்கள் தேடிய கேள்வியில் மிகுந்த வேடிக்கையான கேள்வி, 'தன் கணவருக்கு மிகவும் பிடித்த விஷயம்' என்பதுதான். கணவனுடன் உரையாடல் வழியே அல்லது அவருடன் நெருங்கி பழகுவதன் வழியே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை கூகுளிடம் போய் கேட்டிருக்கிறார்களே! எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு கணவர் மீதும், குடும்பம் மீதும் தான் கவனமிருக்கிறது. முன்பு இது போன்ற விஷயங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள், உடன்பிறந்தவர்கள், தோழிகள் சொல்லி கொடுப்பார்கள். இப்போது தான் எல்லாம் உள்ளங்கைக்கு வந்துவிட்டதே.. அதனால் அங்கு பெண்கள் குவிகிறார்கள்.
இது தவிர யூடியூப்பில் ஒல்லியாக இருப்பது எப்படி, ஆடைகள் போன்றவையும் தேடியிருக்கிறார்கள். இந்தாண்டு தரவுகளை கூகுள் சில மாதங்களுக்குள்ளாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மறந்தும் வீட்டில் இந்த செடிகளை வைக்காதீர்கள்.. மீறினால் வாழ்க்கை நரகமாகும்.. தரித்திரம் தாண்டவம் ஆடும்!