புத்தாண்டுக்கு வண்டி சாவியை கொடுக்காதீங்க பெற்றோர்களே.....

First Published Dec 25, 2017, 11:12 AM IST
Highlights
dont give bike key to youngsters on new year


புத்தாண்டுக்கு வண்டி சாவியை கொடுக்காதீங்க பெற்றோர்களே.....

புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக  நண்பர்களுடன் சேர்ந்து இப்பவே திட்டம் போட்டு வைத்திருப்பார்கள் இளசுகள்.

புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,நட்சத்திர ஓட்டல்கள் முதல் பீச் வரை கொண்டாடட்டம் பலமாக இருக்கும்

அன்றைய தினத்தில் வாலிபர்கள் உற்சாகமாக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டுவர்.

அதுவும் சில நண்பர்கள் குடித்துவிட்டு வண்டியை ஓட்டுவர். அப்போது நிலை தடுமாறி, பலரும் விபத்துக்களை சந்திப்பது வழக்கம்.

அதிலும் குறிப்பாக ஒருவர் செய்யும் தவறுதலுக்கு பலரும் விபத்தில் காயம் அடைவதையும், உயிரிழப்பதையும் பார்க்க முடியும்

எனவே இன்றைய இளசுகளை கட்டுபடுத்த வேண்டும் என்றால்,அதுவும் குறிப்பாக புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக டிசம்பர் 31 ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

அதே போன்று ஒவ்வொரு ஆண்டும்,விபத்துக்கள் அதிகரித்து வருவதும்,படத்தில் வருவது போலவே இன்றைய தலைமுறையினரும் அவரவர் ஹீரோ போன்று நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

“வருமுன் காப்பது சிறந்தது“ என்பதற்கு ஏற்ப,புத்தாண்டை எந்த விதமான சோக நிகழ்வுகளுடன் வரவேற்காமல் இருப்பதே நல்லது.

அதே வேளையில் பாதுகாப்பான முறையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க ஆயத்தமானாலே போதுமானது

click me!