இன்று "மூன்றாம் பிறை பார்க்க தவறாதீங்க"..புண்ணியம் ஏராளம்...!

 
Published : Nov 20, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
இன்று "மூன்றாம் பிறை பார்க்க தவறாதீங்க"..புண்ணியம் ஏராளம்...!

சுருக்கம்

dont forget to see this today

இன்று மூன்றாம் பிறை தரிசனம் கார்த்திகை மாதம் நான்காம் நாள் 

கார்த்திகை மாதம்  என்றாலே  தீப ஒளி மட்டுமே  நம்  கண்  முன் வந்து செல்லும்  அல்லவா?

பெண்கள்  சுமங்கலி பூஜை  செய்வது முதல்,இம்மாத  நன்நாளில் ஐயப்பனுக்கு  மாலை  இட்டு சபரி  மலை  செல்வது  நாம்  அறிந்ததே..

திருவண்ணாமலை  தீபம்  முதல்.. கார்த்திகை  மாத பிறை  வரை  அனைத்தும்  விசேஷமே அல்லவா....

கார்த்திகை மாத  நான்காம்  நாளான இன்று  பிறை  பார்ப்பதால் எந்த  அளவிற்கு  புண்ணியம்  கிடைக்கும்  என்பதை  கீழே உள்ளவற்றை  படித்து  பாருங்கள்....

பிறை பார்ப்பதன் புண்ணியம்

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.

அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிளையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.

வந்திக் கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா?

அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.

திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர் திங்கள் ஆயிரம் தொழுதாள் என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.

பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம்...

பிறை பார்க்கும் பயன்

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

ஆறுபிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்  ( முத்திப்பேறு )

அவரவர்கள் இதனை அச்சிட்டு வழங்கி புண்ணியம் பெறலாம்.

இதனை  நன்கு  உணர்ந்தவர்கள்  இன்றைய  தினம் முதலே  பிறை பார்க்கலாம்.....புண்ணியம் ஏராளமாம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்