
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷம் (29-1-2018, தை 16) அன்று வருகிறது.
மறவாமல் அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சிவ ரகசியம் என்னும் நூலில் (சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டது)
சிவலிங்க பூசை எனும் தலைப்பில், பழங்காலத்தில் திங்கட்கிழமை திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில், "ஸ்ரீசைலம் என்ற தளத்தில்" வாழ்ந்து கொடிய பாவங்களை செய்து வந்த வறிய அந்தணன் பல செல்வங்களை, மாளிகை, பசுக்கள், குதிரைகள் மற்றும் பல வாழ்விற்கு தேவையானவற்றையும் பெற்றான், பெற்றான். அதாவது அன்றைய தினத்தில் பெற்றான்.
அத்தகைய நாள் பல ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் (திங்கட்கிழமை, திரயோதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாள்) வரும் 29-1-2018 தை மாதம் 16 ம் நாள் வருகிறது.
அன்றைய தினம் நாம் அனைவரும் வீட்டில் இருந்தாலும் அலுவலக்தில் இருந்தாலும் அருகில் உள்ள சிவாலயம் சென்று பிரதோஷ விழாவில் இறைவனை வழிபட்டு வாழ்விற்கு தேவையான நலங்கள் பெற்று வாழலாம்...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.