உஷார்..! முட்டை சாப்பிட்ட உடன் மறந்தும் இதை சாப்பிடாதீங்க..!

By ezhil mozhiFirst Published Jul 12, 2019, 3:27 PM IST
Highlights

முட்டை உடம்புக்கு நல்லது மிகவும் சத்தானது என பெரும்பாலானோர் முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி முட்டை சாப்பிடுபவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. 

உஷார்..! முட்டை சாப்பிட உடன்  மறந்தும் இதை சாப்பிடாதீங்க..!

முட்டை உடம்புக்கு நல்லது மிகவும் சத்தானது என பெரும்பாலானோர் முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி முட்டை சாப்பிடுபவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. அதன் படி முட்டை சாப்பிடும் போது உடனடியாக மற்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.

சர்க்கரை

முட்டை சாப்பிட்ட உடன்  தெரிந்தோ தெரியமலையோ சர்க்கரை சாப்பிட்டால், சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றாக சேர்ந்து கிளைகோஸைலல் லைசின் உருவாக்கி முட்டையில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைத்து விடும். இந்த மூலக்கூறுகள் ரத்தம் உறைதலை தடுக்கும். எனவே  மறந்து கூட முட்டை சாப்பிட்ட உடன் சர்க்கரை  சாப்பிட வேண்டாம்.

சோயால் பால்

முட்டை மற்றும் சோயா பால் உடலுக்கு நல்ல வலிமை தரும் என்பதால் பலரும், காலை எழுந்த வுடன் முட்டை உண்ட பிறகு சௌரா பாலை அருந்துவார்கள். இது தவறானது .. காரணம் முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் உடலுக்கு பிரச்சனை ஏற்படுத்தும்.மேலும் நம் உடல் ப்ரோடீன்  உறிஞ்சுவதையும் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறைச்சி..!

முட்டை மற்றும் இறைச்சி இவரை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும் போது, செரிமான பிரச்னையை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலை உருவாகும். 

டீ குடிக்கவே கூடாது...!

தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள ப்ரோடீன் உடன் சேர்ந்து செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உடலில் அதிக நச்சுக்களை தங்க வைத்து விடும். 

இதே போன்று முட்டையுடன் சாப்பிட்ட உடன் உருளைக்கிழங்கை சாப்பிட கூடாது. காரணம்.. உருளை கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியல் உள்ளிட்ட சத்துக்களை உடல் உறிஞ்ச  விடாமல் தடுக்கும் மேலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
இதே போன்று முட்டை சாப்பிட்ட உடன் பழங்களையும் சாப்பிட கூடாது. காரணம் பழங்கள் மிக எளிதாக செரிமானம் ஆகும். ஆனால் முட்டை செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளலாம். 

click me!