உங்கள் வீட்டு பூஜை அறையில் மறந்தும் இப்படி செய்திட கூடாது..!

By ezhil mozhiFirst Published Mar 18, 2019, 4:12 PM IST
Highlights

நம் வீட்டு பூஜை அறையை நாம் எப்படி வைத்துக்கொள்கிறோம் ? எந்த  முறையை பயன்படுத்துகிறோம்..? எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் வீட்டு பூஜை அறையை நாம் எப்படி வைத்துக்கொள்கிறோம் ? எந்த முறையை பயன்படுத்துகிறோம்..? எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் தினமும் நம் வீட்டில் எப்படி ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கிறோமோ அதனை பொருத்து தான் நம் வீட்டில் எந்த அளவிற்கு லட்சுமி கலாட்சம் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக தெரிந்துக்கொள்ள முடியும்.அதன் படி  நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாமா..? 

காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது.

சாமி படங்களுடன், நமது முன்னோரின் படங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது.

வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக் கூடாது.

பூஜையின்போது, விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது.

துண்டைக் கட்டிக்கொண்டோ, துண்டை தோளில் போட்டுக்கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக்கூடாது.

விளக்கேற்றி வழிபடும்போது, விளக்கில் இருந்து திரி எரியக்கூடாது.

தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது.

இயற்கைப் பூக்களுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.

வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம் தருமம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல.

நிவேதனம் செய்த தேங்காயைச் சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

பூஜை அறையில், அல்லது சாமி படங்களில் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது

இவை அனைத்தையும் நாம் பின்பற்றி வந்தால், நம் வாழ்வில் எந்த துன்பமும் இல்லாமல் வாழலாம். ஒரு சிலர் தெரிந்தும் தெரியாமலும் இது நாள் வரை சிலவற்றை செய்து வந்திருப்பார்கள். இனி அவ்வாறு இல்லாமல் இருப்பது ஆக சிறந்தது. 

click me!