"இது" தெரியாமல் தான் தோன்றித்தனமாக உடற்பயிற்சி செய்யாதீங்க...!

By ezhil mozhiFirst Published Feb 14, 2020, 6:44 PM IST
Highlights

வாரத்திற்கு 5 மைல் தூரம் அதாவது வெறும் 10,000 ஸ்டெப்ஸ் மட்டுமே நடந்தால்.... மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்பு வராமல் 31% தடுக்க முடியும். அதுமட்டுமல்ல.. தினமும் உடற்பயிற்சி செய்து புத்துணர்வுடன் வைத்துக்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இது தெரியாமல் தான் தோன்றித்தனமாக உடற்பயிற்சி செய்யாதீங்க...! 

நாம் வாழும் இன்றைய வாழ்க்கை முறையில் கண்டிப்பாக உடற்பயிற்சி என்பது தேவையான ஒன்று... இதனை நாம் உணர்ந்து இருந்தாலும் வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சிக்கு அந்த அளவிற்கு நேரம் ஒதுக்குவது இல்லை. ஆனாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்த முதலில் இந்த 5 முக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்

1. நீண்ட ஆயுட்காலம் பெற: 

வாரத்திற்கு 5 மைல் தூரம் அதாவது வெறும் 10,000 ஸ்டெப்ஸ் மட்டுமே நடந்தால்.... மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்பு வராமல் 31% தடுக்க முடியும். அதுமட்டுமல்ல.. தினமும் உடற்பயிற்சி செய்து புத்துணர்வுடன் வைத்துக்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். 

2.புத்துணர்ச்சி பெற: 

Trekking ...அதாவது இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியில் மாசு இல்லாத காற்றில் கூட்டமாக இயற்கையை ரசித்தபடி சென்று வந்தால் நம் உடலுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் நல்ல ஒரு புத்துணர்வை கொடுக்கும் 

3. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க: 

ட்ரெக்கிங் செல்லும் போது, நம் உடலில் நல்ல வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கால் தசைகள் நன்கு வலுவடையும். உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி உடலை கட்டுக்கோப்பாக  வைத்திருக்க உதவி செய்யும்  

4. எலும்புகளை வலுப்படுத்த :

உடலில் உள்ள எலும்புகளை  வலுப்படுத்த பளு தூக்குதல் பயிற்சி மிகவும் சரியான தேர்வாக இருக்கும்..ஆனால் நம் தோள் பட்டையில் சற்று எடை கூடுதலாக உள்ள பையை (bag ) சுமந்துகொண்டு செல்லும் போது பளு தூக்குதலால் கிடைக்கும் நன்மையை விட ட்ரெக்கிங்  மூலம் கிடைக்கும் நன்மை சற்று அதிகமாகவே இருக்கும். 

5. கவனம் ஒருநிலை படுத்தவும் செயல்பாடு அதிகரிக்கவும் ..!

வார இறுதி நாட்களில் இது போன்று ட்ரெக்கிங் சென்றால் மன அழுத்தம் குறைந்து நம் செயல்பாடும் அதிகரிக்கும். நம் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

இத்தனை பயன்கள் இருக்கும் போது நாம் ஏன் தினமும் உடற்பயிற்சி செய்ய கூடாது. சிந்தித்து பாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வது நல்லது. அதே போன்று சில  நாட்கள் உடற்பயிற்சி செய்து விட்டு சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டாலும்  பெரிய பிரச்சனை தான்.

காரணம்..உடல்  தசைகள் நன்கு தளர்ந்து விட்டு... குண்டான தோற்றம் உண்டாகும். எனவே உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வருவது நல்லது. 

click me!