கழுதைப்பால் விற்பனை செய்யும் குடும்பங்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பும் அவலம்.!!

Published : Mar 30, 2020, 09:10 AM IST
கழுதைப்பால் விற்பனை செய்யும் குடும்பங்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பும் அவலம்.!!

சுருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் இன்றி, சொந்த ஊா் திரும்பும் கழுதைப்பால் விற்கும் குடும்பங்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.

T.Balamurukan
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் இன்றி, சொந்த ஊா் திரும்பும் கழுதைப்பால் விற்கும் குடும்பங்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக அனைத்துக் கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்ல காவல்துறை உத்தரவிட்டு அவ்வப்போது அவர்களை கண்காணித்து வருகின்றது.

பெரம்பலூரைச் சோ்ந்த கேசவன், அவரது குடும்பத்தினா் கழுதை பால் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.இவர்கள் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ,விருதுநகர்,தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கழுதை பால் விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வெளிமநிலத்தாரையும், வெளிமாவட்டத்தினரையும் அவரவர் சொந்த ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது கொரொனா.கழுதைப் பால் விற்கச் சென்றவர்களும் தங்கள் சொந்த ஊரான பெரம்பலூருக்கு கால்நடையாக திரும்பும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

50 மில்லி கழுதைப் பால் ரூ. 50,100 என விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் கேசவன், ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் கைவசம் 6 கழுதைகள் இருக்கிறதாம்.கழுதைப்பால்.., குழந்தைகளுக்கு சீர் அடித்தால் கழுதையின் மூச்சு காற்றை அந்தகுழ்ந்தையின் முக்கத்தில் ஊதவிடுவார்கள். கக்குவான் ,இருமல் போன்றவற்றிற்கு கழுதை பால் நல்லது.இந்த பால் கிடைப்பது அரிதாக அமைந்து விட்டது". என்பது தற்போது அரிதாகி விட்டது.

"தடை உத்தரவால் உணவு கிடைப்பது சிரமமாக உள்ளது. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளோடு சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம். வழியில் காவல்துறையினா், தன்னார்வலா்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். மூன்று நாள்களாக தொடா்ந்து பயணம் செய்து வருகிறோம். சாலையோரங்களில் பயணத்தின்போது கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம் என்றகிறார்கள் ராணி குடும்பத்தினர்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க
Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?