
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோர் 2022 டிசம்பரில் முதல் முறையாக தங்களின் இரட்டைக் குழந்தைகளுடன் இந்தியாவுக்குத் திரும்பினர். இஷா அம்பானியும் ஆனந்த் பிரமலும் மும்பை திரும்பியவுடன் அவர்களுக்கு பரிசு மழை பொழிந்தது. அந்த வகையில் தற்போது, ஆதியாவுக்கு வழங்கப்பட்ட விலை உயர்ந்த பரிசின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஷா அம்பானியின் மகள் ஆதியா சக்தி பிரமாலுக்கு 108 தங்க மணிகளுடன் ஆடம்பர பரிசு வழங்கப்பட்டது. அதில் ஆதியாவின் பெயர் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும், சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட அந்த பரிசில் சக்தி தேவியின் வேறு பெயரையும், தங்கத்தில் எழுதப்பட்ட பெயரின் அர்த்தத்தையும் குறிப்பிடும் ஒன்பது படிகளும் அடங்கும். 108 தங்க மணிகள் இந்து வேதங்களில் இருந்து 108 மங்களகரமான மந்திரங்களைக் குறிக்கின்றன.
இஷா அம்பானியும் ஆனந்த் பிரமலும் 2022 டிசம்பரில் தங்கள் சொந்த ஊரான மும்பையில் உள்ள இஷா அம்பானியின் வீட்டில் திரும்பினர். இது இஷாவின் தந்தை அம்பானியால் பரிசளிக்கப்பட்ட வீடாகும். ஆனந்த் பிரமாலின் பெற்றோருடன் இஷா அம்பானியின் சகோதரர்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரும் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி வீட்டு வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தின் விலை இவ்வளவு தானா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.