Throat Ulcers Causes In Tamil : தொண்டைப்புண் பிரச்சினை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். எனவே, தொண்டை புண் எதனால் ஏற்படுகிறது? அதை குணப்படுத்துவது எப்படி என்று பற்றி இங்கு பார்க்கலாம்.
தொண்டைப்புண் என்பது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். ஆனால் இதை சாதாரணமானது என்று நினைத்து விடாதீர்கள். இது எல்லா காலத்திலும் வந்தாலும், மழைக்காலத்தில் தொண்டை போல் மோசமான வலியை கொடுக்கும். மழைக்காலத்தில் சளி இருமல் காய்ச்சல் கொண்டு வருவது போலவே, தொண்டை புண் பிரச்சினையையும் கொண்டு வரும். இதனால் தொண்டை பகுதியில் வீக்கம், வலி மற்றும் தொண்டையில் கரகரப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
தொண்டைப்புண் மிகவும் வேதனையான வலியை கொடுக்கும். ஏனெனில், இந்த புண்ணின் மீது உணவு மற்றும் தண்ணீரை படும்போது தொண்டையில் ஊசி குத்துவது போல் உணர்வை கொடுக்கும். மேலும், குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ சாப்பிடும் போது கூட தொண்டையில் எரியும் உணர்வு ஏற்படும். இந்தத் தொண்டை புண்கள் காரணமாக காய்ச்சல் கூட வரலாம். இதற்கு நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது நல்லது. இல்லையெனில், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் உங்களுக்கு தெரியுமா.. தொண்டைப்புண் பிரச்சினை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ஏன்.. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கூட இந்த பிரச்சனை வரலாம்.
undefined
இதையும் படிங்க: தொண்டையில் தொற்று ஏற்பட்டால் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!
தொண்டைப்புண் ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
தொண்டை வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, வாய்ப்புண், தொண்டையில் வீக்கம், இருமல், பேசுவதில் சிரமம், இதயம் எரியும் உணர்வு, தொண்டையில் சிவப்பு வெள்ளை புண்கள், அடிக்கடி தும்மல் அதீத உடல் வலி தலைவலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். அதுபோல, குழந்தைகள் சாப்பிடும் உணவை விழுங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது தொண்டை வலியால் மூச்சு திணறல் ஏற்பட்டாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
இதையும் படிங்க: சளி, தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் இதோ..
தொண்டைப்புண் வர காரணம் என்ன?
தொண்டைப்புண் பொதுவாக, வைரஸ் தொற்றுகளால் தான் ஏற்படுகிறது. குறிப்பாக, சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வரலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் துண்டை புண் ஒரு வாரத்திலேயே சரியாகிவிடும். அதுவே, நீடித்தால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. அதுபோல நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, மது அருந்துதல், புகைப்பிடித்தல், புற்றுநோய் போன்றவற்றின் காரணமாகவும் தொண்டைப்புண் வரும்.
துண்டைப் புண் சில குணமாக வீட்டு வைத்தியம்:
1. தினமும் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு முறை சாப்பிடுங்கள்.
2. மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அண்ட் நீரை குடியுங்கள்.
3. வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து அந்த நீரால் வாய் கொப்பளிக்கவும்.
4. ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
5. இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகை தேநீரை குடியுங்கள்.
6. தீனிகள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D