Car AC TIps : காருக்குள்ளே தூங்குவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள்.
காரில் பயணிக்கும்போது வழியில் காரை நிறுத்திவிட்டு அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஏசியின் குளுமையில் காருக்குள் தூங்குவது உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்துவதாக சிலர் நினைக்கின்றனர். இதனால் மீண்டும் பயணத்தை தொடங்குவதும் வசதியாக உள்ளது. ஆனால் இன்ஜினை 'ஆன்' செய்தபடியே காருக்குள் தூங்குவதால் பாதிப்புகள் உண்டு என்பதை பலரும் அறிவதில்லை.
காருக்குள் உறங்கும் நபர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் காரின் சேம்பரில் (Car Chamber) கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்களின் கலவையால் நிரம்பியிருக்கும். காருக்குள்ளே ஒருவர் தூங்கும்போது மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
காருக்குள் புழுக்கம் ஏற்படும் என்பதால் பலர் ஏசி-யை 'ஆன்' செய்தபடி தூங்குவார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரம் வரை தான் இது பாதிப்பை உண்டாக்காது. சிலருக்கு நேரம் ஆக ஆக மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய காரில் ஏர் எக்ஸாஸ்ட் சிஸ்டம் (Air Exhaust System) சீராக இயங்காவிட்டாலும், மூச்சு திணறல் ஏற்படும். இது மரணத்திற்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: மழை காலத்தில் ஏசியை இப்படி பயன்படுத்துங்க... கரெண்டு பில் மிச்சமாகும்!!
இந்த ஏர் எக்ஸாட் சிஸ்டத்தில், கார்பன் மோனாக்ஸைடு எனும் CO உள்ளது. இந்த வாயு நறுமணமற்றது. இதனை நாம் கண்டறிய வழியில்லை. குறிப்பாக இது நாம் சுவாசிப்பதற்கு ஏற்றதல்ல. அதிக நேரம் ஏசியை ஓட விடுவதால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். காருக்குள் கார்பன் மோனாக்ஸைடு வாயு அளவு அதிகரித்தால் காருக்கு உள்ளே தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் இது உயிரையே பறிக்கும்.
ஏசியின் குளிர்ச்சிக்காக காரின் ஜன்னல்களை திறக்காமல் மூடியே வைப்பதால் புதிய காற்று உள்ளே வராது. ஆக்ஸிஜன் பரிமாற்றம் இல்லாமல் அப்படியே பயணிப்பதால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒருவர் மரணம் கூட அடையலாம்.
இதையும் படிங்க: எச்சரிக்கை: வெடிக்கும் ஏசி, பிரிட்ஜ்.. தவிர்க்க சில வழிகள் இதோ..!
காருக்குள்ளே தூங்குவதில் இருக்கும் சிக்கல்களை அலட்சியப்படுத்தாமல் இருப்பது தான் நம் உயிருக்கு உத்ரவாதம். அதனால் இனிமேல் காருக்குள் தூங்குவதை தவிருங்கள். நிறுத்தப்பட்ட காரில் தூங்குவதும் கெட்ட விளைவுகளையே ஏற்படுத்தும்.
காரில் பயணிக்கும் போது அடிக்கடி ஜன்னல்களை திறந்து வைப்பது மோசமான பாதிப்புகளை தவிர்க்கும். இன்ஜின் ஆன் செய்து நிறுத்தப்பட்ட காரில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் எக்ஸாட் சிஸ்டம் சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி சோதித்து கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D