தீபாவளி என்றால் என்ன ?.... தெரியாதவங்க  தெரிஞ்சிகோங்க.........!!!

 
Published : Oct 29, 2016, 05:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
தீபாவளி என்றால் என்ன ?.... தெரியாதவங்க  தெரிஞ்சிகோங்க.........!!!

சுருக்கம்

தீபாவளி என்றால் என்ன ?.... தெரியாதவங்க  தெரிஞ்சிகோங்க.........!!!

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது என்பதே ...தீபாவளி..!!!

அதுமட்டும் இல்லாமல், மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.

 மேலும்  பல   காரணங்கள்  உண்டு....!!!

 தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சில......

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

 இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

 தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு...............

எனவே தான், நாம் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுகின்றோம்.

 

 

 

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்