IRCTC Tour Package : இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மணமகிழ்ந்து அனுபவிக்க பல்வேறு வகையான டூர் பேக்கேஜ்களை தொடர்ச்சியாக IRCTC அறிவித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களும் தெய்விகமாக நேரத்தை செலவிட ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
IRCTC டூர் பேக்கேஜ், விலை மலிவான அதே நேரத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு சௌகரியமான பயணத்தோடு கூடிய டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் Divine Journey : Three Dhams & Six Jyotirlingas என்ற ஒரு புதிய பேக்கேஜை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. சுமார் 15 இரவுகள் மற்றும் 16 பகல்கள் கொண்ட இந்த பேக்கேஜ் வருகின்ற ஜனவரி மாதம் 5ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு துவங்க உள்ளது.
இதில் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் எவ்வாறு பயணிக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ம் தேதி புது டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தான் இந்த பேக்கேஜ் தூங்க உள்ளது. ஆனால் காஜியாபாத், அலிகார் ஜங்ஷன், துன்ட்லா கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இருந்தும் கூட இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் பங்கேற்கலாம்.
ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்.. ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்..
மேலும் இந்த பேக்கேஜ் மூலம் மூன்று தாம்ஸ மற்றும் ஆறு ஜோதீர்லிங்கங்களை காணும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். இந்த ரயில் சேவையை பயன்படுத்தும் பொழுது வாரணாசியில் உள்ள துளசி மானஸ் கோவில் சங்கட் மோட்சம் கோவில், விஸ்வநாதர் கோயில் போன்றவற்றை பார்வையிட வாய்ப்புகளை அளிக்கிறது IRCTC. இது தவிர இந்த பயணத்தின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசிக்கவும் அவுரங்கபாத்தில் உள்ள கிருஷ்ணேஸ்வர் ஜோதிடலிங்க கோவில் மற்றும் எல்லோரா குகை ஆகியவற்றையும் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
IRCTC Tour : குறைந்த விலையில் ஏசி ரயிலில் பயணம்.. ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ் - முழு விபரம் இதோ !!
இந்த டூர் பேக்கேஜிங் கீழ் 15 இரவு மற்றும் 16 பகல் மக்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என்று அனைத்தையுமே IRCTC பார்த்துக்கொள்ளும். அது தவிர ரயிலில் சமைக்கப்படும் பிற உணவுகளை உண்ணும் வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். ரயிலில் பயணம் செய்யும் நேரம் தவிர வெளியிடங்களில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் ஓய்வெடுக்க உங்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். ரயிலில் இருந்து இறங்கி உங்கள் ஹோட்டல் மற்றும் பிற சுற்றுலா தளங்களுக்கு சென்று வர ஏசி பேருந்து வசதியும் செய்து தரப்படும்.