வந்துவிட்ட்டது "டிஜிகாப்"..! தப்பு பண்ணா அடுத்த நொடியே மாட்டுவீங்க..! உஷார்..!

By Arun VJFirst Published Jun 15, 2019, 5:11 PM IST
Highlights

எந்தவொரு இடத்திலிருந்தும் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக டிஜிகாப் டிஜிகாப்  என்ற செயலியை காவல் ஆணையர் ஏகே விசுவநாதன் நேற்று தொடங்கி வைத்தார். 

வந்துவிட்ட்டது "டிஜிகாப்" தப்பு பண்ணா அடுத்த நொடியே மாட்டுவீங்க..! உஷார்..!

"டிஜிகாப்" 

எந்தவொரு இடத்திலிருந்தும் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக டிஜிகாப் டிஜிகாப்  என்ற செயலியை காவல் ஆணையர் ஏகே விசுவநாதன் நேற்று தொடங்கி வைத்தார். மாநில குற்ற ஆவண காப்பகம், சென்னை காவல் துறையுடன் இணைந்து டிஜிகாப் என்ற மொபைல் செயலியை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த செயலியை 72 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் பதிவிறக்கம் இது உள்ளனர். மேலும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியில் புகார் தெரிவித்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 8,311 செல்போன்கள் காணாமல் போனது பற்றி தான் அதிக புகார்கள் எழுந்துள்ளது. இதன்மூலம் 1227 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலியுடன் மேம்படுத்தப்பட்ட முறையில் சிசி டிஎன்எஸ் சேவையையும் வழங்க உள்ளது.

இதன் மூலம் எந்த இடத்தில் இருந்தும் டிஜிகாப் செயலி மூலம் புகார் அளிக்க முடியும். புகார் அளிக்கப்பட்டதற்கு ஆதாரமாக உள்ள சிஎஸ்ஆர் காப்பி உள்ளிட்ட அனைத்து விபரமும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் மக்கள் மிகவும் பயனடைய முடியும். 

click me!