
உயர் இரத்த சர்க்கரை (ஹைப்பர்கிளைசீமியா) நீரிழிவு (Diabetes) நோயாளிகளில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. நீண்ட காலமாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், அது நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்தைக் பாதிக்கிறது. இதனால், கைகள் மற்றும் கால்களில் சில முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் வெளிப்படலாம்.
உடலில் சரியான நேரத்தில் சர்க்கரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இது நரம்பு சேதம் (Diabetic Neuropathy), இரத்த ஓட்ட குறைவு (Poor Circulation), மற்றும் தசை பலவீனம் (Muscle Weakness) ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கைகள் மற்றும் கால்களில் காணப்படும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் :
1. மணிக்கட்டு மற்றும் பாதங்களில் எரிச்சல், அரிப்பு அல்லது முள்முளப்பு
உயர் இரத்த சர்க்கரையின் முக்கிய விளைவுகளில் ஒன்று நரம்பு சேதம். பாதிக்கப்பட்ட நரம்புகள் சரியாக தகவல்களை அனுப்ப முடியாமல் இருப்பதால், முள்முளப்பு (tingling), அரிப்பு, எரிச்சல் அல்லது தேய்மான உணர்வு ஏற்படலாம். இது பெரும்பாலும் கைவிரல்கள், உள்ளங்கைகள், கால்விரல்கள், மற்றும் பாதங்களில் அதிகமாக ஏற்படும்.
தீர்வு:
* உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும்.
* வழக்கமான வாக்கிங், யோகா போன்ற உடற்பயிற்சி செய்யவும் .
* B-வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும்
2. திடீர் வலி, வலிப்பு மற்றும் தசை இறுக்கம்
நரம்புகள் சரியாக வேலை செய்யாவிட்டால், கைகளிலும் கால்களிலும் வலி, தசை இறுக்கம் மற்றும் திடீர் முளைத்துடிப்பு ஏற்படும்.
இரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் மகிழ்வு உணர்வுக்கு பாதிப்பு, இதனால் மனம் பதற்றம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம்.
தீர்வு:
* நீர்ச்சத்து அதிகமான உணவுகளை உட்கொள்ளவும்.
* நீர்ச்சத்து முக்கியம் – தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
* மிகுந்த சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்.
3. கால்கள் மற்றும் கைகளில் வீக்கம்:
* நீரிழிவு காரணமாக சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுவதால், உடலில் திரவம் அதிகமாகும். இதனால், கால்கள், பாதங்கள் மற்றும் கைகள் வீங்கும்.
* நீண்ட நேரம் நின்றாலோ அல்லது உட்கார்ந்திருப்பதாலோ, இது மேலும் மோசமாகலாம்.
* கணுக்காலில் அழுத்தினால் உட்புகும் மாதிரி இருப்பது முக்கிய எச்சரிக்கை அறிகுறி ஆகும்.
தீர்வு:
* உப்பு அளவை கட்டுப்படுத்தவும் .
* உடலுக்கு தேவையான நீர் பருகுதல் முக்கியம்.
* அடிக்கடி கால் மற்றும் கையை நகர்த்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும்.
4. தசை பலவீனம் மற்றும் சமநிலை பிரச்சனை
* நரம்பு பாதிப்பு அதிகரிக்கும்போது, மனிதன் தனக்கே தெரியாமல் தடுமாறலாம், சமநிலை இழக்கலாம்.
* காலில் சிறு காயம் ஏற்பட்டாலும், அது சீக்கிரம் ஆறாது.
* கைகளை வைத்து பொருட்களை பிடிப்பது, எழுவது, நடைபயிற்சி செய்வது மிகவும் சிரமமாக மாறலாம்.
தீர்வு:
* தசை வளர்ச்சி உணவுகளை உட்கொள்ளவும்.
* விடாமல் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்யவும்.
* வைட்டமின் டி மற்றும் கால்சியம் அளவை அதிகரிக்க சூரிய ஒளியில் சிறிது நேரம் இருக்கவும்.
5. கைகள் மற்றும் கால்கள் மிகவும் குளிர்வது
* இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், கைகளை மற்றும் கால்களை சுழற்சி சரியாக இல்லாமல் இருக்கலாம், இதனால் குளிர்வதாக உணரப்படும்.
* இது இரத்த நரம்புகள் அடைபடும் அறிகுறி ஆக இருக்கலாம்.
* ஒரு சிலருக்கு கால்களில் நிறம் மாறுதல், பழுப்பு அல்லது நீல நிறத்திலான தோல் மாற்றம் கூட காணப்படலாம்.
தீர்வு:
* கிடைக்கும் பொழுதில் பாதங்களை நேராக நீட்டி அமரவும்.
* குளிர்ந்த காலநிலையில் கைவிரல், கால்விரல்களை உரசி சூடு செய்யவும்.
* உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள் சேர்க்கவும்
நீங்கள் எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
* உங்கள் கைகள் மற்றும் கால்களில் மேற்கண்ட எச்சரிக்கை அறிகுறிகள் அடிக்கடி தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகவும். குறிப்பாக,
* மூச்சுத்திணறல், கண்கள் மங்கல், அல்லது தலைசுற்றல் ஏற்பட்டால்.
* கால்களில் எரிச்சல் அல்லது வலி அதிகமாக இருந்தால்.
* சிறு காயங்கள் கூட சீக்கிரம் ஆறவில்லை என்றால்.
* நடக்க முடியாத நிலை அல்லது சமநிலை இழக்கிறீர்கள் என்றால்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.