அடடா.. சிக்கனில் தோசை கூட செய்யலாமா? சுவை அல்டிமேட்ங்க!

By Kalai SelviFirst Published Sep 10, 2024, 7:30 AM IST
Highlights

Chicken Dosai Recipe : இந்த கட்டுரையில் சிக்கன் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தோசை பிரியா? இன்று காலை உணவாக உங்கள் வீட்டில் தோசை தான் செய்யப் போறீங்களா? எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் ஏதாவது தோசை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

சிக்கன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவு எதுவென்றால் அது சிக்கன்தான். இந்த சிக்கனில் தோசை சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் கேட்பதற்கு உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். இதுவரை நீங்கள் சிக்கனில் தோசை சுட்டு சாப்பிட்டதில்லை என்றால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள் தொடர்ந்து படியுங்கள். அதற்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Latest Videos

இந்த சிக்கன் தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு தோசையும் பிடிக்கும் சிக்கன் பிடிக்கும் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து கொடுத்தால் அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் சிக்கன் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  1 கப் தேங்காய் வச்சி இப்படி தோசை சுட்டு பாருங்க.. பஞ்சு போல சாஃப்டா இருக்கும்!

சிக்கன் தோசை செய்வதற்கான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்
முட்டை - 2
சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலாத்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான மசாலா தோசை... ரெசிபி இதோ!!

செய்முறை :

சிக்கன் தோசை செய்யும் முதலில், வாங்கி வைத்த சிக்கன் கொத்து கறியை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, மசியும் வரை வதக்கி கொள்ளுங்கள். 

அதன் பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அது கழுவி வைத்த கொத்துக்கறியை போட்டு நன்றாக வதக்க கொள்ளுங்கள். இதனுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கறி சுருண்டதும் பொடியாக நறுக்கி வைத்த கொத்துமல்லி இலையை தூவி இறக்கி வையுங்கள். பிறகு முட்டை கலக்கி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றுங்கள். பின் மாவின் மேல் தயாரித்து வைத்த சிக்கன் மசாலாவை பரப்பி விடுங்கள். பின் அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் தோசை தயார். இந்த தோசையை நீங்கள் அப்படியே சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!