அச்சச்சோ...தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா?

Published : Mar 01, 2025, 09:59 PM IST
அச்சச்சோ...தரையில் படுத்து தூங்கினால் இத்தனை ஆபத்து வருமா?

சுருக்கம்

வெறும் தரையில் விரிப்பு இல்லாமல் தூங்குவது சுகமானதாக இருக்கலாம். ஆனால் அதோ போல் தொடர்ந்து தூங்கி வந்தால் உடலில் பலவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும். வெறும் தரையில் படுத்து தூங்குவதால் எந்த மாதிரியான அபாய நிலை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தரையில் படுத்து தூங்குவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். அதிலும் விரிப்பு ஏதும் விரிக்காமல் வறும் தரையில் படுக்கும் பழக்கம் இருந்தது. இன்றும் பலருக்கும் பிடித்தமான, சுகமான ஒரு வழக்கமாக இது உள்ளது. வெறும் தரையில் படுத்து உறங்குவது சுகமானதாகவும், உடலுக்கு குளிர்ச்சியானதாகவும் இருக்கலாம்.  ஆனால் வெறும் வரையில் படுக்கும் போது பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் உடல் வலி, நோய்த்தொற்றுகள், நேரடி குளிர்ச்சியின் தாக்கம், மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற தீமைகளை தந்து விடும்.

வெறும் தரையில் படுத்து தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் :

1. உடலுக்கு நேரடி குளிர்ச்சி தாக்கம் :

எந்த வகையான தரையாக இருந்தாலும் இயற்கையாகவே குளிர்ச்சியான ஆற்றலை அதிகமாகக் கொண்டிருக்கும். இதனால் வெளியில் வெப்பமான தட்பவெப்ப நிலை இருந்தால் இந்த குளிர்ச்சி உடலுக்கு சுகமானதாக இருக்கும். ஆனால் உடலின் உள்வெப்பத்தையும் சேர்த்து இது குறைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் உடல் வெப்பநிலை திடீரென குறைந்து உடல் நடுக்கம் ஏற்படும். மூட்டுச்சிதைவு (Arthritis) உள்ளவர்களுக்கு வலி அதிகரிக்கும். குளிர்காய்ச்சல் மற்றும் தொண்டை அழற்சி ஏற்படும் வாய்ப்பு. இயற்கையாக வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டுமே நிலத்தில் உறங்குவது சிறப்பான தேர்வாக இருக்கும். 

2. முதுகு வலி, கீழ்வாதப் பிரச்சனை ஏற்படும் :

தரையில் உறங்கும்போது உடல் முழுவதும் திடமான மேற்பரப்பில் ஒட்டிவிடும். இதனால், முதுகெலும்பு  சரியாகச் தரையில் ஒட்டாமல் இருக்கும். இதன் காரணமாக முதுகு மற்றும் முழங்கால்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, வலி அதிகரிக்கும்.  முடக்குவாத நோய்கள் உள்ளவர்களுக்கு தரையில் படுத்து உறங்குவது மிகுந்த வலியை ஏற்படுத்தும். முதுகெலும்பு அசைவின்மை காரணமாக அழுத்தம் அதிகரித்து தசை இறுக்கமும் ஏற்படும். வயதானவர்களுக்கு முதுகு கோணல் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும்.  உடலுக்கு தேவையான மென்மையான ஆதரவுடன் உறங்குவதே சிறந்தது.

3. சிறுநீரக செயல்பாடுகளை பாதிக்கும் :

குளிர்ச்சியான தரையில் உறங்கும்போது உடலின் அடிப்பகுதி (Lower Abdomen) அதிக குளிர்ச்சியை உள் இழுக்கும். இது சிறுநிரகங்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் வெப்பநிலையில் இயங்கும் உறுப்புகளாக இருப்பதால், அதில் நேரடியாக குளிர்ச்சி தாக்கம் ஏற்படும்போது சிறுநீர் பிரச்சினைகள் அதிகரிக்கும். சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் மூட்டுச்சிதைவு பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீரகக் கற்கள் (Kidney Stones) உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.  சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க மெத்தைப் பயன்படுத்துவது முக்கியம்

4. பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்கள் :

தரையில் இருக்கும் தூசி, புழுக்கள், நுண்கிருமிகள், மற்றும் பாக்டீரியாக்கள் உடலின் நேரடியாக தொடர்பு கொள்ளும். இது தோல் மற்றும் உடலியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். தோல் அழற்சி (Skin Infections) அதிகமாக ஏற்படும். பூஞ்சை தொற்றுகள் (Fungal Infections) மற்றும் அதிகப்படியான ஒவ்வாமை நோய்கள் (Allergies) உருவாகும். தூசி மற்றும் கிருமிகளால் ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

இந்த 6 பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அலட்சியம் வேண்டாம்...நினைவாற்றலை குறைத்து விடும்

5. இரத்த ஓட்ட பாதிப்பு : 

தரையில் உறங்கும்போது உடல் முழுவதும் நெகிழ்வில்லாத நிலையில் இருக்கும். இதனால், இரத்த ஓட்டம் குறைவாகும். சிறுநீரக, பக்கவாத, மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும். கால்களில் உரத்த சிராய்ப்பு உணர்வு அதிகரிக்கும். தசைகள் பலவீனப்பட்டு மற்றும் உடல் சோர்வு ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். 

6. புழுக்கள் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு :

தரையில் இருக்கும் எறும்புகள்,கொசுக்கள், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படும்.  தூக்கத்தின் போது பூச்சிகள், கொசுக்கள் கடிப்பதால் டெங்கி மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும். சில நேரங்களில் விஷம் கொண்ட பூச்சிகளும் கடிக்க வாய்ப்புள்ளது. 

7. தூக்கத் தொந்தரவுகள் மற்றும் மன அழுத்தம் :

தரையில் உறங்கும்போது உடல் முழுவதும் ஒற்றை நிலையில் இருக்கும். இது தூக்கத்தின் தரத்தை குறைக்கும்.  தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஏற்படும். நீண்ட நாட்கள் தொடர்ந்து தரையில் உறங்கினால், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Red Banana : வெறும் வயிற்றில் 'செவ்வாழை' சாப்பிடுவது நல்லதா? அவசியம் 'இதை' தெரிஞ்சுக்கோங்க
Henna Hair Pack : நரைமுடியை கருப்பாக்க 'மருதாணி' கூட இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க