காகம் உணர்த்தும் ஜோதிடப் பலன்...! நல்லது முதல்... கெட்டது வரை...!

crow astrology good and bad things
crow astrology good and bad things


முன்னோர்கள் கண்டு பிடித்த ஜோதிட வகைகளில் ஒன்று தான் காகத்தைப் பார்த்து சகுனத்தை கணித்துக் கூறுவது. ஆனால் தற்போதைய நவீன உலகத்தில் காகம் ஒரு பறவையாக மட்டுமே பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. 

நம் முன்னோர்கள் காகத்தை கடவுள் சனீஸ்வர பகவானாகவும், உணவை பகிர்த்து உண்பதில் அன்பின் சின்னமாகவும்... நல்லது... கெட்டது உள்ளிட்டவைகளை உணர்த்தும் சக்தியாகவும் பார்த்தனர்.crow astrology good and bad things

Latest Videos

பழங்காலத்திலேயே காக்கைபாடினியார் எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் கணித்து கூறியுள்ளார். 

இதைப்பற்றி பார்க்கலாமா:

* பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் செல்வாது லாபத்தையும், இடமிருந்து வலம் செல்வது நஷ்டத்தையும் குறிக்கும்.

* பயணத்தின் போது பயணம் செல்லும் நபரை நோக்கி காகம் கரைந்துக் கொண்டே பறந்து வந்தால்... பயணத்தை தவிர்த்து விடுங்கள்.

* காகத்திற்கு உணவு வைக்கும் காட்சி கிடைத்தால் பயணம் இனிதாகும்.

* ஒருவரை காகம் பயணத்தின் போது, அவருடைய வாகனம், குடை, காலணி, மற்றும் உடல் ஆகியவற்றால் சிறகால் தீண்டினால் அவருக்கு அகால மரணம் கூட நேரிடலாம். சற்று கவனமாக இருந்தால் அதையும் தவிர்க்கலாம்.

* காக்கை நீங்கள் கொண்டு செல்லும் வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது எச்சம் செய்தால் பயணத்தின் போது உணவு தட்டுப்பாடு இருக்காது என்பதை குறிக்கும்.

* காரணமின்றி காகம் கரைந்தால் பஞ்சம் வரப்போவதையும், காரணமின்றி சுற்றிப் பறந்தால் எதிரிகள் வரப்போவதையும் குறிக்கும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

* ஒருவர் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை நேருதலையும், கூட்டமாக மிக உயரத்தில் பறந்தால் அவ்வூருக்கு ஆபத்து வருவதையும் குறிக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image