நாகையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறலால் பலி.!!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 10:37 PM IST
Highlights

நாகை மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறல் காரணமாக திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

T.Balamurukan

நாகை மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறல் காரணமாக திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனாவுக்கான பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.இதுவரை 19,060 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.தமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.அந்த 50 பேரில் 48 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.சென்னையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். அவர் வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தைச் சேர்ந்தவர்.வயது 70. இவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனா பரிசோதனைக்காக முதியவரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால்,முடிவுகள் இன்னும் வரவில்லை. மூச்சுத்திணறலால் முதியவர் உயிரிழந்திருந்தாலும் கொரோனா நோயாளி உடல் அடக்கம் செய்வது போல் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!