டாக்டர்ஸ், நர்ஸ்களுக்கு கொரோனா தொற்றியதால் ஓர் மருத்துவமனையே "தனிமை"..!

By ezhil mozhiFirst Published Apr 6, 2020, 7:56 PM IST
Highlights

மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

டாக்டர்ஸ், நர்ஸ்களுக்கு கொரோனா தொற்றியதால் ஓர் மருத்துவமனையே "தனிமை"..!

மும்பையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதால் அந்த மருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 

இந்தியா முழுக்க தற்போது 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது கொரோனா. இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும்   தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் மும்பையில் உள்ளது வாக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது 

இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் நோயாளிகளை அனுமதிக்க பெட் இல்லை என்பதால்  தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்துகின்றனர்.  

இந்நிலையில், மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை டெஸ்ட் செய்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். அதே போன்று மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியில்  அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பாதித்தவர்களை தான் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றால், தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நர்ஸ்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஓர்  மருத்துவமனையே   தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!