அடுத்த கட்ட மாஸ் விழிப்புணர்வு! கொரோனா குறித்து "எமன்" வேடத்தில் விழிப்புணர்வு..!

By ezhil mozhiFirst Published Apr 6, 2020, 7:21 PM IST
Highlights

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தற்பொழுது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அடுத்த கட்ட மாஸ் விழிப்புணர்வு! கொரோனா குறித்து "எமன்" வேடத்தில் விழிப்புணர்வு..! 

144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சித்திரகுப்தன் எமன் வேடமணிந்து விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தற்பொழுது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடப்படையில் வரக்கூடிய 14ஆம் தேதி வரை தொடர்ந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள மத்திய அரசு பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

சமூக விலகினால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வற்ற நபர்கள் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது சித்திரகுப்தன் எமன் ஆகிய வேடமணிந்த இருவர் அத்தியாவசிய தேவையின்றி அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து அரசு தடையுத்தரவை மீறியதால் கொரோணா  நோய் தாக்குதலுக்கு ஆளான நபரை எமன் பாசக்கயிற்றை வீசி அவரை எமலோகம் அழைத்துச் செல்வது போன்று நடித்துக் காட்டி அவர்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரையும் அவர்கள் வழங்கினார்.

வித்தியாசமான முறையில் எமன் போன்று வேடமளித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

click me!