கொரோனா அட்டாக் ..உடல்நிலை மோசம்.. வேறு வழி இல்லாமல் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட தம்பதி.!!

By Thiraviaraj RMFirst Published Mar 27, 2020, 9:30 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது.இனிமேலும் தங்களால் வாழமுடியாது என கருதிய தம்பதியினர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையை உலுக்கிக் கொண்டிருக்கிறது. 

T.Balamurukan

 கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது.இனிமேலும் தங்களால் வாழமுடியாது என கருதிய தம்பதியினர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையை உலுக்கிக் கொண்டிருக்கிறது.  

ஏப்ரல் 14ம் தேதிவரைக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய மாநில அரசுகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ரேசன் கடைகளில் அரிசி,பருப்பு,எண்ணெய்,சீனி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 2ஆயிரம் வழங்கவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் பிரகாஷ் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ், வெங்கட லட்சுமி. சதீஷ் ஆட்டோ தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் இரண்டு பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே பிழைப்பு நடத்தி வந்தனர்.சதீஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து டயாலிசிஸ் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் சதீஷ் மற்றும் வெங்கடலட்சுமி ஆகிய இருவரும் இன்று காலை வீட்டிற்கு வெளியே உள்ள காலி இடத்தில், தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தங்களுக்கு கொரானா ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது. எனவே வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆட்கொண்ட பிறகு நடந்திருக்கும் முதல் தற்கொலை சம்பவம் இது.

click me!