கொரொனா கொடூரம் நொய்டாவில் பள்ளிக்கு விடுமுறை!!அச்சத்தில் இந்தியா..!!

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2020, 9:04 AM IST
Highlights

நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

T.Balamurukan

நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த இரண்டு பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா் டெல்லி மயூா் விஹார் பகுதியைச் சோ்ந்தவா். அவா் டெல்லியில் உள்ள கம்பெனியில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். அவா் அண்மையில் ஆபீஸ் விசயமாக இத்தாலிக்குக் சென்றிருந்தார். அங்கு சென்ற அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட டெல்லியை சோ்ந்தவரின் குழந்தை படிக்கும் பள்ளி உள்பட நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தைக்குத்தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிக்கு மார்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் முக்கியத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு பள்ளியும் முன்னெச்சரிக்கையாக மார்ச் 9-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு பள்ளிகளுக்கும் கிருமி நாசினிகளைத் தெளித்து வைரஸ்களை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நொய்டா மருத்துவத் துறை உயரதிகாரி தலைமையிலான சுகாதாரக் குழுவினா், இப்பள்ளிகளை  நேரில் சென்று ஆய்வு செய்தனா்.


 கொரொனா பாதிப்புக்குள்ளானவா் தனது குழந்தையின் பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியுள்ளார்.அந்த குழந்தையின் நண்பர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனா். அவா்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக டெல்லி, உத்தரப்பிரதேச சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், அக்குழந்தை படிக்கும் பள்ளியின் மாணவா்கள் ஐந்துபேரிடம் மருத்துவ மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்தப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நொய்டா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

click me!