முக்கிய தகவல்..! "ஐஸ் வாட்டர்" குடிக்காதீங்க..! கொரோனா எதிரொலி..!

By ezhil mozhiFirst Published Mar 16, 2020, 1:36 PM IST
Highlights

குளிர்பானத்தை விரும்பி அருந்துபவர்கள் இந்த ஒரு காலகட்டத்தில் கட்டாயம் அதனைத் தவிர்த்துவிட்டு வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் நம் வீட்டில் குடிநீரை நன்கு கொதிக்கவைத்து மிதமான வெப்பநிலையில் அருந்துவது மிகவும் நல்லது.

முக்கிய தகவல்..! ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க..! கொரோனா எதிரொலி..! 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஒரு நிலையில் 110 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கமிருக்க இந்தியா போன்ற நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் எந்த ஒரு வைரஸ் தாக்கமும் மக்களுக்குப் பெருமளவு பாதிக்காது என்ற கருத்து நிலவி வருகிறது. 

வெப்பத்தின் தாக்கம் வைரஸ் பரவுவதை தடுக்கும் என்ற ஒரு நிலைப்பாடு இருக்கிறதோ இன்னொரு பக்கம்... மிகவும் விரும்பி நாம் அருந்தும் குளிர்பானம் குறிப்பாக கோடை காலத்தில் குளிர் பானத்தை அருந்துவது அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் மிக கவனமாக உற்று நோக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், குளிர்பானம் அருந்துபவர்களுக்கு வைரஸ் எளிதாக தாக்கும். மேலும் வைரஸின் தாக்கம் ஏற்ப்பட்ட பின் அதிவேகமாக நம் உடலினுள் பரவும் என் பதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குளிர்பானத்தை விரும்பி அருந்துபவர்கள் இந்த ஒரு காலகட்டத்தில் கட்டாயம் அதனைத் தவிர்த்துவிட்டு வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் நம் வீட்டில் குடிநீரை நன்கு கொதிக்கவைத்து மிதமான வெப்பநிலையில் அருந்துவது மிகவும் நல்லது. குறிப்பாக கொரோனா பரவி வரும் இந்த ஒரு தருணத்தில் வேறு எந்த ஒரு மாற்று வழியும் இல்லாததால் அனைவரும் இது குறித்து புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

click me!